துணை முதல்வராகிறாரா உதயநிதி ஸ்டாலின்? பச்சைக் கொடி காட்டிய முதல்வர்

Udhayanidhi Stalin Deputy CM after Lok Sabha Election 2024? லோக்சபா தேர்தலுக்கு (Lok Sabha Election 2024) பிறகு தமிழக அரசியலில் நடக்கப்போகும் பெரிய மாற்றம். அவை என்ன என்பது இங்கே.

மக்களவைத் தேர்தல் முடிவுக்குப்  (Lok Sabha Election 2024)  பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு (Udhayanidhi Stalin) துணை முதல்வர் (Deputy Chief Minister) பதவி வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் தலைவர் ஸ்டாலினிடம்(M. K. Stalin)  பேசிய கட்சி நிர்வாகிகள், தினமும் 17, 18 மணி நேரம் உழைக்கிறீர்கள். போதிய ஓய்வு எடுக்காமல் இருப்பது உடலுக்கு நல்லதல்ல அண்ணா.  கடினமான பொறுப்புகளை உதயாவுடன் (Udhayanidhi Stalin)  பகிர்ந்து கொள்ளலாம். நிர்வாக விஷயங்களையும் அவர் கையாள வேண்டும். கடந்த 1 வருடமாக உதயாவின் (Udhayanidhi Stalin) செயல்பாடுகளை கவனித்து வருகிறோம்.

நிர்வாகத்தில் முதிர்ச்சி தெரிகிறது. மிக முக்கியமான விஷயங்களை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். மீதியை அவர் பார்த்துக் கொள்வதால் அவருக்கு உயர் பொறுப்பு வழங்கலாம் என சில மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதால் எனக்கு அந்த யோசனை உள்ளது சகோ. மேலும் சில மூத்த தலைவர்கள் ஸ்டாலினிடம் (M. K. Stalin) அதிகாரபூர்வமாக துணை முதல்வராக (Deputy Chief Minister) நிர்வாகத்தை கவனிக்க வேண்டும் என்று பேசியுள்ளனர்.

ஜூன் 4ம் தேதிக்கு பிறகு சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Leave a comment