Tamil Nadu Scholarship 2024 நீங்கள் தமிழகத்தில் படிக்கும் மாணவரா? உங்கள் கல்விக்கான நிதி உதவியைப் பெற விழைகிறீர்களா? கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்வி உதவித்தொகை 2024 இப்போது உங்களுக்காக! இந்த சிறந்த கல்வி உதவித்தொகை திட்டம், மொத்தம் 12 லட்சம் ரூபாய் மதிப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அவர்களின் கல்வி முயற்சிகளில் ஆதரவு அளிக்கிறது. இந்த கட்டுரையில், இந்த புகழ்பெற்ற உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறையை விளக்குவோம், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை அறிமுகப்படுத்துவோம், தகுதி நிபந்தனைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றிய முக்கிய தகவல்களை வழங்குவோம். இப்போது விண்ணப்பித்து, உங்கள் கல்வி இலக்குகளை அடைவதற்கான முக்கியமான அடியெடுத்திடுங்கள்!
Also Read: How To: ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ் பெறுவது எப்படி? How to get OBC certificate in 2 days?
Tamil Nadu Scholarship Government Education Scholarship Schemes (தமிழ்நாடு அரசு கல்வி உதவித்தொகை திட்டங்கள்
தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் (Tamil Nadu Government Scholarship Schemes) மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவி (Scholarship ) வழங்குகிறது.
- தமிழ்ப்புதல்வன் (Tamil Puthalvan) திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் கல்வி உதவி வழங்கப்படுகிறது.
- புதுமைப் பெண் திட்டம் (Pudhumai Penn Scheme) மூலம் மாணவிகளுக்கு கல்வி உதவித் திட்டம் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டங்கள் (Central Government Education Scholarship)
- சிறுபான்மையின மாணவர்களுக்கான (Minority Scholarship) கல்வி உதவித் திட்டம்
- உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் ஆண்டுக்கு ரூ. 50,000. கல்வி உதவித் திட்டம்
Also Read: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் | Pradhan Mantri Fasal Bima Yojana 2024
தனியார் அறக்கட்டளைகள் கல்வி உதவித்தொகை திட்டங்கள் (Private Trust Education Tamil Nadu Scholarship)
பல்வேறு தனியார் அறக்கட்டளைகள் மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது அனைவரும் அறிந்ததே.
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை (Kalki Krishnamoorthy Education Scholarship 2024) 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகையை தமிழகத்தில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கும் வகையில் இந்த கல்வி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை (Kalki Krishnamurthy Memorial Trust) ஆண்டுதோறும் செயல்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அத்தகைய விண்ணப்பத்திற்கு, மாணவர் மொத்தம் ரூ.12 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை பெறுவார். விண்ணப்பிக்கும் மாணவர்களின் தகுதிக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும் என கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை (Kalki Krishnamurthy Memorial Trust ) தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் சில பின்வருமாறு,
- நடப்பு கல்வியாண்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும் மற்றும் போனபைட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- தற்போது பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரியில் ஏதேனும் ஒன்றில் படித்து இருக்க வேண்டும்,
- கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கடைசியாக தேர்வு எழுதியதில் குறைந்தபட்ச சராசரியாக 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் குறைவான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்: DOWNLOAD APPLICATION FORM