How To: ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ் பெறுவது எப்படி? How to get OBC certificate in 2 days?

ரஃபி முகமது

How to get OBC certificate in 2 days? ஓபிசி சான்றிதழ் பெறுவது எப்படி?

What is the criteria for OBC/Who is OBC category (ஓபிசி என்றால் என்ன)?

BC, MBC, DNC பிரிவின் கீழ் வருபவர்கள் OBC சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பித்து பெற முடியும்

What is an OBC caste certificate (OBC சான்றிதழ் என்றால் என்ன)?

நம் நாட்டில், சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாய்ப்புகளில் சமநீதி உறுதிப்படுத்த இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதற்காக, பின்தங்கியவர்கள் மற்றும் மிகவும் பின்தங்கியவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளைப் பெற OBC (Other Backward Class) பிரிவின் கீழ் சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்த சான்றிதழ் வீட்டிலிருந்தபடியே எப்படி விண்ணப்பித்து பெறுவது என்பதை இப்போது பார்ப்போம்.

How to: தமிழக மாணவர்கள் ரூபாய் 12 லட்சம் கல்வி உதவித் தொகை எப்படி பெறுவது ? Tamil Nadu Scholarship 2024

Documents Required for OBC Certificate (தமிழ்நாட்டில் OBC சான்றிதழ் தேவைப்படும் ஆவணங்கள் என்ன?)

– ஆதார் அட்டை (Aadhar Card)

– வருமானச் சான்றிதழ் (Income Certificate) 

– பேஸ்லிப் (Pay Slip)

– புகைப்படம் (Photographs)

– சொத்து விவரங்கள் (Property Details)

– வங்கிப் புத்தகம் (Bank Passbook) 

– ரேஷன் அட்டை (Ration Card) 

– வகுப்புச் சான்றிதழ் (Community Certificate)

– பான் எண் (Pan Card) 

– சுய உறுதிப் படிவம் (Self Declaration)

How To: இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்குவது எப்படி? How To Delete Instagram Account?

How to apply for OBC certificate Online / How can I get my OBC certificate online in TN? (ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ் பெறுவது எப்படி) ?

  • முதலில் TNeGA என்ற இணையதளத்தினை ஓபன் செய்து கொள்ளவும்.
  • அதன் முகப்புப் பகுதியில் பயனாளர் உள்நுழைவு/Citizen login என்ற ஆப்ஷனை click செய்து உள்ளே செல்லவும்.
  • உள்நுழைந்ததும் Login செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே Register செய்திருந்தால் உங்களுடைய User Name, Password உள்ளீடு செய்து Login செய்யவும். 
  • புதிதாக Register செய்ய வேண்டுமென்றால் New User என்பதை click செய்து உங்களைப் பற்றிய சுயவிவரங்களையும், User Name மற்றும் Password ஆகியவற்றையும் உள்ளீடு செய்யவும். 
  • அதன்பின் Login பகுதிக்கு வந்து, நீங்கள் Register செய்யும்போது கொடுத்த User Name, Password ஆகியவற்றைக் கொடுத்தோ, உங்களுடைய மொபைல் எண்ணைக் கொடுத்தோ Login செய்யவும்.
  • உங்களுக்கான போர்டல் ஒன்று திறக்கும். அதில் Revenue Department என்ற பகுதியில், REV 115 – Other Backward Class என்பதை click செய்யவும்.
  • உங்களுக்கான வழிமுறைகள் குறித்த Page ஒன்று திறக்கும். அதைச் சரியாகப் படித்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை எடுத்து வைத்துக்கொண்டு Proceed என்பதை click செய்யவும்.
  • அடுத்ததாக உங்களுடைய CAN (The Common Account Number)ஐ Register செய்ய வேண்டும். 
  • உங்களுடைய CAN நம்பர் தெரிந்தால் Register செய்யவும். 
  • இல்லை என்றால், அந்தப் பகுதியின் கீழே உங்களுடைய ஆதார் குறித்தான விவரங்கள் கேட்கப்படும்;  அதைச் சரியாகக் கவனித்து உள்ளீடு கொடுத்துவிட்டு Search என்பதை click செய்தால் உங்களுடைய CAN நம்பர் உங்களுக்குக் கிடைத்துவிடும்.
  • அதை click செய்து, கீழேயே உங்களுடைய ஆதார் கார்டில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை டைப் செய்யவும். 
  • பின் அந்த மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அதை உள்ளீடு செய்துவிட்டு Proceed என்ற தேர்வை click செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில், உங்களுடைய சுய விவரங்கள் அனைத்தும் இருக்கும். அதன் கீழே உங்களுடைய தொழில், வகுப்பு, படிப்பு, தந்தை, தாயின் சுயவிவரங்கள், வேலை தொடர்பான விவரங்களை இணைக்க வேண்டும்.
  • அடுத்து, கேட்கப்படும் ஆவணங்களை ஒவ்வொன்றாக அப்லோடு செய்ய வேண்டும். அப்லோடு செய்வதற்கு ஏற்ற சைஸ்களில் ஆவணங்களை வைத்திருந்தால் எளிதாகப் பதிவேற்றம் செய்யலாம். 
  • அனைத்தையும் பதிவேற்றம் செய்தபின் அந்தப் பக்கத்தில் இருக்கும் Self declaration form-ஐ அப்படியே Download செய்து, பிரின்ட் எடுத்து, உங்களுடைய கையொப்பம் இட்டு, மறுபடியம் Soft copy ஆக upload செய்யவும். அல்லது, கணினியில் download செய்த பின்னர், அந்த Self declaration form-ஐ Adobe Reader பயன்படுத்தி கணினிலேயே கையொப்பம் இட்டு upload செய்யவும்.
  • அனைத்தையும் upload செய்தபின், make payment என்ற பகுதியை click செய்து உள்ளே சென்று Terms and Conditions என்ற தேர்வை click செய்த பின் Make payment என்பதை click செய்யவும். உங்களுக்கு எந்த முறையில் பணம் செலுத்த முடியுமோ அதை click செய்து ரூபாய் 60-ஐ செலுத்தவும். 
  • பின் உங்களுக்கு ஒரு Acknowledgement slip கொடுக்கப்படும்.
  • இவ்வாறு எல்லாம் பூர்த்தி செய்து, அப்லோடு செய்த பின் உங்கள் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உங்கள் அலைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். 
  • பின்னர், இந்த விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என அடுத்தடுத்த அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்று சரிபார்க்கப்பட்டு 2 நாள்களுக்குள்ளாக உங்களுக்கு ஒபிசி சான்றிதழ் கிடைக்கப்பெறும்.

How to Download OBC Certificate (OBC சான்றிதழ் பதிவிறக்கம்) ?

இந்த முறையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே உங்களுடைய OBC சான்றிதழை நீங்கள் அப்ளை செய்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் அருகில் உள்ள இசேவை மையங்களுக்கு சென்றால் அவர்கள் உதவுவார்கள். அவர்கள் கொடுத்த Acknowledgement slipஐ 2 நாள்கள் கழித்து எடுத்துச் சென்று, உங்கள் OBC சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

OBC  Certificate Validity Tamilnadu

OBC certificate is valid from 1st April to 31st March of the subsequent year. Better you apply on 1st April, 2024 which will be valid till 31st March, 2025.

How can I renew my OBC certificate in Tamil Nadu (தமிழ்நாட்டில் OBC சான்றிதழை எவ்வாறு புதுப்பிப்பது) ?

தமிழ்நாட்டில் OBC சான்றிதழை ஆன்லைனில் புதுப்பிக்கும் செயல்முறை, புதிய சான்றிதழை பெறும் செயல்முறையைப் போலவே இருக்கும். விண்ணப்பதாரர் தேவையான ஆவணங்களுடன் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது இசேவை மையத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

What to do if my OBC certificate is expired (எனது OBC சான்றிதழ் காலாவதியானால் என்ன செய்வது)?

தமிழ்நாட்டில் OBC சான்றிதழை ஆன்லைனில் புதுப்பிக்கும் செயல்முறை, புதிய சான்றிதழை பெறும் செயல்முறையைப் போலவே இருக்கும். விண்ணப்பதாரர் தேவையான ஆவணங்களுடன் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது இசேவை மையத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

Can OBC certificate be Cancelled (OBC சான்றிதழை ரத்து செய்ய முடியுமா)?

ஜாதிச் சான்றிதழை வழங்கிய அதிகாரிகளால் சாதிச் சான்றிதழை ரத்து செய்ய முடியாது என்பது இப்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பில் சாதிச் சான்றிதழை ரத்து செய்வதற்கான நடைமுறையை நெறிப்படுத்தியுள்ளது.

 

TAGGED: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version