செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்? மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை

Photo | P Jawahar, EPS

Senthil Balaji Case: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு (Senthil Balaji) ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை (Enforcement Directorate) இன்று (ஏப்ரல் 29) எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் (Supreme Court).

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது தமிழ் நாடு காவல்துறையினர் 3 வழக்குகளை பதிவு செய்தனர்.

அதன்படி, சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி (Senthil Balaji) மீது வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவரை கைது செய்தது அமலாக்கத்துறை  (Enforcement Directorate)

சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு (Senthil Balaji) ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் (sessions court), உயர்நீதிமன்றத்திலும் (Chennai High Court) தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் நீண்ட காலமாக சிறையில் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி (Senthil Balaji) உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) மனு தாக்கல் செய்தார்.

இதற்ககு அமலாக்கத்துறை (Enforcement Directorate) பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் (Supreme Court) உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில் இன்று (ஏப்ரல் 29) அமலாக்கத்துறை (Enforcement Directorate)பதில் மனு தாக்கல் செய்தது

அதில், “செந்தில் பாலாஜி  (Senthil Balaji) சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதால், செந்தில் பாலாஜிக்கு  (Senthil Balaji)ஜாமீன் வழங்கினால் அது வழக்கு விசாரணையை பாதிக்கும். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. அவருக்கு ஜாமீன் வழங்கினால், அவர் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புகள் உள்ளது. அமைச்சர் பதவியை செந்தில்பாலாஜி  (Senthil Balaji) ராஜினாமா செய்தபோதிலும், தற்போதும் அவர் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளதால் அதிகாரமிக்க நபராக உள்ளார். இதன் மூலம், சாட்சியங்களை தடுக்க வாய்ப்புள்ளது. எனவே, செந்தில் பாலாஜிக்கு  (Senthil Balaji) ஜாமீன் வழங்கக்கூடாது” என அமலாக்கத்துறை  (Enforcement Directorate சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில்  (Senthil Balaji) ஆஜரான வழக்கறிஞர், “320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை  (Enforcement Directorate தாக்கல் செய்திருக்கிறது. தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர்” என வாதிட்டார்.

தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) அமலாக்கத்துறை  (Enforcement Directorateதரப்பு மன்னிப்பு கோரியது.

இதனையடுத்து பதில் மனுவை நாங்கள் இன்னமும் படித்து பார்க்கவில்லை. எனவே வழக்கின் விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

வரும் மே 18ஆம் தேதியிலிருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்திற்கு கோடை கோடை விடுமுறை ஆகும்.

எனவே மே 6ஆம் தேதி நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் பிறகு ஒன்றரை மாதம் செந்தில் பாலாஜி காத்திருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Leave a comment