A1 அதானி A2 அம்பானி பிஜேபியை கதற விட்ட ராகுல் | A1, A2 Rahul Gandhi Vs Gautam Adani

ரஃபி முகமது

Rahul Gandhi Vs Gautam Adani: நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை 23-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

Rahul Gandhi Vs Narendra Modi

பட்ஜெட்டின் மீதான விவாதத்தில் இன்று (ஜூலை 29) பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவில் அச்சம் நிறைந்த ஒரு சூழல் நிலவுகிறது. அந்த அச்சம் நமது நாட்டின் அனைத்து அம்சங்களிலும் பரவியுள்ளது. சிறு, குறு வணிக நிறுவனங்களை மிக கடுமையாக பாதித்திருக்கும் வரிப்பயங்கரவாதத்தின் பிரச்சனையை பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை. வினாத்தாள் கசிவு என்பது இளைஞர்களைப் பாதித்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அக்னிவீர் திட்டத்தின் சக்கரவியூகத்தில் நம் நாட்டு இளைஞர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து பட்ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லை.

மக்கள் தொகையில் 73 சதவிகிதம் உள்ள தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பட்ஜெட்டில் எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை”என்று குறிப்பிட்டார்

Also Read: How To: ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ் பெறுவது எப்படி? How to get OBC certificate in 2 days?

Rahul Gandhi Vs Gautam Adani

அம்பானி, அதானி ஆகியோர் பெயரைக் குறிப்பிட்டால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்பதால் A 1, A2 (Adani Vs Rahul Gandhi) என்று இங்கு குறிப்பிடுகிறேன்.

இந்தியாவின் மொத்த உள்கட்டமைப்பு மற்றும் வணிகத்தை அவர்கள் இரண்டு பேரின் கட்டுப்பாட்டில் உள்ளது. விமான நிலையங்கள், தொலைத்தொடர்பு அமைப்புகள், துறைமுகங்கள் ஆகியவற்றை வைத்திருக்கின்றனர். தற்போது ரயில்வே துறையிலும் களமிறங்கியுள்ளனர். நாட்டின் பணத்தின் மீது அவர்கள் ஏகபோக சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

Also Read: தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிவிப்பு – மாதம் ரூ.1000 உதவித்தொகை: ஆதார் இணைப்பு அவசியம் | Tamil Pudhalvan Scheme Update

NDA அரசாங்கம் செய்யத்தவறிய வாக்குறுதிகளை நாங்கள் செய்வோம் என்று இந்த நாட்டின் விவசாயிகளுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான மசோதாவை நாங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வோம்.

இந்த பட்ஜெட்டுக்கு முன்பாக நடுத்தர வர்க்கத்தினர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் தற்போது, அவர்களின் முதுகிலும் நெஞ்சிலும் நீங்கள் குத்தியுள்ளீர்கள்” என்று தெரிவித்தார்.

TAGGED: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version