காங்கிரஸ் கூட்டணி வென்றால் பிரதமர் தமிழரா ?

India Alliance PM Face: மன்மோகன் சிங்கைப் (Manmohan Singh) போல ஒரு ஆச்சரியத்தைத் திட்டமிடுகிறதா இந்தியா கூட்டணி (INDIA Alliance).

காங்கிரஸ் கட்சி (Congress Party) முன்மொழியப்போகும் தமிழர் யார்? வாருங்கள் பார்க்கலாம்.

2024 லோக்சபா தேர்தலுக்கு (Lok Sabha Election 2024), யாரும் யூகிக்க முடியாத தமிழர் ஒருவரை பிரதமராக்க காங்கிரஸ் கட்சி (Congress Party) திட்டம்  வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மக்களவைத் தேர்தலில் (Lok Sabha Election 2024), காங்கிரஸ் கட்சி (Congress Party) முழுப்பெரும்பான்மை பெற்றால் ராகுல் காந்தியை (Rahul Gandhi) பிரதமராக (Prime MInister) அறிவிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு (Congress Party) முழுப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், இந்தியக் கூட்டணியின் (INDIA Alliance) ஆதரவு தேவைப்பட்டாலும் ராகுல் காந்தியை (Rahul Gandhi) முன்னிறுத்தும் திட்டம் உள்ளது.

ஆனால், இந்திய கூட்டணிக்கு (INDIA Alliance) பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் அமையும் பட்சத்தில், திரிணாமுல் காங்கிரஸ்  (Trinamul Congress), பிஜு ஜனதா தளம் (Biju Janatha Dal) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெற காங்கிரஸ் (Congress Party) திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் கட்சியின் (Congress Party) ராகுல் காந்தி (Rahul Gandhi)  பிரதமராக முடியாது. ராகுல் காந்தியை (Rahul Gandhi)  பிரதமராக ஏற்க மம்தா பானர்ஜி (Mamta Banerjee) இறங்கமாட்டார். இதற்கும் ஆம் ஆத்மி (AAP) தயாராகாது.

இதுபோன்ற சமயங்களில், இந்தியக் கூட்டணியின் (INDIA Alliance)  தலைவர்கள் மூன்று பேரை பரிசீலித்துள்ளார்கள்.

முதலாமவர், மல்லிகார்ஜுன கார்கே (Mallikarjun Karge). இவர் தலித் பின்னணியை சேர்ந்தவர். இதனால் அவரது பெயரை காங்கிரஸ் (Congress Party) நிச்சயம் முன்மொழியும் என்கிறார்கள்.

அதே நேரத்தில் தேசிய அளவில் இந்திய கூட்டணி (INDIA Alliance)  சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலின் (Arvind Kejriwal) பெயர் முன்மொழியப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை கூட இந்திய கூட்டணியில் உள்ள மற்ற மாநில முதல்வர்கள் ஏற்க வேண்டும்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மன்மோகன் சிங் (Manmohan Singh) போன்ற அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை காங்கிரஸ் (Congress Party) மனதில் வைத்திருக்கிறது. அவர்தான் ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் (Raghuram Rajan). அவர் தமிழர். தற்போது தமிழக திமுக (DMK) அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார்.

India Alliance PM Face

அவரை எதிர்க்க மாற்றுக் கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை. மன்மோகன் சிங்கைப் (Manmohan Singh) போலவே அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர். அவருக்கு பொருளாதாரம் தெரியும். இதனால் அவரை முன்னிறுத்த காங்கிரஸ் (Congress Party) தலைமை திட்டமிட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு (Rahul Gandhi) உள்துறை (Home Ministry) போன்று பவர்புல் கேபினட் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இவை அனைத்தும் இந்தியா கூட்டணி (INDIA Alliance)  பெறும் இடங்களைப் பொறுத்தது. அதே நேரத்தில், பிரதமர் பதவி தொடர்பாக ரகுராம் ராஜனுடன் (Raghuram Rajan).  இந்திய கூட்டணி (INDIA Alliance)  அதிகாரப்பூர்வ ஆலோசனை நடத்தவில்லை.

 

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Leave a comment