How To Make Google Business Profile உங்களின் வணிக வளர்ச்சிக்கு கூகுள் பெரிய பங்காற்ற முடியும். அதற்குத் தேவையானது, கூகுள் பிசினஸ் புரொஃபைல் (Google Business Profile).
இன்றைய இணைய யுகத்தில், கூகுளை (Google) பயன்படுத்தாதவர்கள் எவ்வளவு குறைவென்று சொல்லலாம். காலையில் கண் விழிப்பது முதல் இரவில் உறங்கும் வரை கூகுள் (Google) அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுகிறது. இதனாலேயே, நமது தனிப்பட்ட தேவைகளை மட்டுமின்றி, வணிக வளர்ச்சிக்கும் கூகுள் பெரிய பங்காற்ற முடியும். அதற்குத் தேவையானது, கூகுள் பிசினஸ் புரொஃபைல் (Google Business Profile).
Google Business Profile என்றால் என்ன? What is business profile ID in Google
சிறிய அளவில் வணிகம் செய்பவர்கள் தங்கள் தொழிலை கூகுள் செர்ச் (Google Search) மற்றும் மேப்களில் (Google Map) புரொமோட் செய்ய உதவும் இலவச டூல், கூகுள் பிசினஸ் புரொஃபைல் (Google Business Profile). இதன் மூலம் வாடிக்கையாளர்களுடன் கனெக்ட் ஆகவும், தொழிலின் அப்டேட்களை பதிவேற்றவும், உங்கள் வணிகத்துடன் அவர்கள் எவ்வாறு இணைகிறார்கள் என்பதையும் அறியலாம். கூகுளில் (Google) ஒருவர் உங்கள் தொழில் பற்றிக் கண்டுபிடிக்கும்போது, உங்கள் விவரங்கள் தெரியும். இந்த புரொபைல் (Google Business Profile) மூலம் வணிகத்தின் சரியான இடம், தொடர்பு விபரங்கள் போன்ற அம்சங்கள் உள்ளதால், வாடிக்கையாளர்கள் எளிதாக உங்களை அணுக முடியும்.
Google Business Profile அமைப்பது எப்படி?
- முதலில் உங்களுக்கென ஒரு Gmail ஐடி உருவாக்கிக் கொள்ளவும். ஏற்கெனவே இருந்தால் அதனை வணிகத்திற்கு பிரத்யேகமாக பயன்படுத்தவும்.
- உங்களது லேப்டாப் அல்லது மொபைலில், Google Business இணையதள முகவரியை https://www.google.com/business சரிபார்த்து உள்ளே செல்லவும்.
- திறக்கும் பக்கத்தில், “Sign in” பகுதியை கிளிக் செய்து, உங்கள் வணிக பெயரை உள்ளிடவும்.
- “Next” கொடுத்து, உங்கள் வணிகம் எந்த பிரிவை சேர்ந்தது, ஆன்லைன், உள்ளூர், அல்லது சேவை தொடர்பானதா என்பதைக் தேர்ந்தெடுத்து “Next” கொடுக்கவும்.
- தனிப்பட்ட தகவல்களான வணிகத்தின் பெயர், முகவரி, தொடர்பு எண் போன்றவற்றை பதிவு செய்யவும். மேப் மார்க்கர் மூலம் இருப்பிடத்தை குறிக்கவும்.
- வணிகத்தின் நேரத்தை குறிப்பதற்கு இருக்கும் பகுதிகளில் விவரங்களை நிரப்பவும்.
- “Next” கொடுத்து, வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் மெசேஜ்களை அனுமதிப்பதற்கான இடத்தில் “Yes” கொடுத்து, வணிகத்தின் முழு விவரங்களை குறிப்பிடவும்.
- தேவையானால், வணிகம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பதிவேற்றவும். விருப்பப்பட்டால் வணிகத்திற்கான விளம்பரங்களை பணம் செலுத்தி பெறலாம்.
உங்களுடைய Google Business Profile இப்போது தயாராகிவிடும். சில மணி நேரங்களில் அல்லது சில நாட்களில் உங்கள் கணக்கு சரிபார்க்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.
உங்களின் பிஸினஸிற்கு Google Business Profile கூகுள் பிசினஸ் புரொஃபைல் அமைக்க எங்களின் சேவை தேவைப்பட்டால் எங்களை தொடர்புகொள்ளவும் – 7010118212