குஜராத் ராஜஸ்தானில் ரூ. 300 கோடி போதைப்பொருள் வேட்டை!

Drug Seizure in Gujarat | குஜராத் (Gujarat) மற்றும் ராஜஸ்தானில் (Rajasthan) உள்ள ரகசிய தொழிற்சாலைகளில் இன்று நடந்த சோதனையில் ரூ. 300 கோடி (Rs 300 crores) மதிப்பிலான போதைப் பொருட்கள் (drugs) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (Narcotics Control Bureau NCB) மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (Gujarat Anti-Terrorism Squad ATS) இணைந்து இன்று நடத்திய கூட்டு நடவடிக்கையில் மெபெட்ரோன் (mephedrone) உள்ளிட்ட சுமார் ரூ.300 கோடி (Rs 300 crores) மதிப்பிலான போதைப் பொருள்களை (drugs)பறிமுதல் செய்தனர் (Drug Seizure in Gujarat)

குஜராத் (Gujarat) மற்றும் ராஜஸ்தானில் (Rajasthan) மாநிலங்களில் இருந்து மெபெட்ரான் (mephedrone) போதைப்பொருள் தயாரிக்கும் ரகசிய நடவடிக்கை குறித்து குஜராத் தீவிரவாத தடுப்பு படைக்கு (Gujarat Anti-Terrorism Squad) உளவு கிடைத்தது. இதையடுத்து, குஜராத் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கூட்டுக் குழு (Anti-Terrorist Squad and Narcotics Control Squad of Gujarat Police) அங்கு சோதனை நடத்தப்பட்டது.

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில காவல்துறையினரின்(Gujarat and Rajasthan state police) உதவியுடன் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (Narcotics Control Burea NCB) இன்று ரகசிய போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்பில் ஈடுபட்டுள்ள நபர்களை தீவிரமாக கண்காணிக்கும் ஒரு வேட்டையை நடத்தியது.

ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் (Rajasthan’s Jalore distric) பின்மால் (Binmal), ஜோத்பூர் (Jodhpur) மாவட்டத்தில் உள்ள ஒசியான் (Osian) மற்றும் குஜராத்தில் (Gujarat) காந்திநகர் (Gandhinagar) ஆகிய 3 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர் (Drug Seizure in Gujarat). மொத்தம் 149 கிலோ மெபெட்ரான் (mephedrone) (தூள் மற்றும் திரவ வடிவில்), 50 கிலோ எபிட்ரின்(ephedrine) மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் (acetone) ஆகியவை கைப்பற்றப்பட்டன.

போதைப்பொருள் உற்பத்திக்காக கைப்பற்றப்பட்ட மூலப்பொருட்களின் மதிப்பு ரூ. 300 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கும்பலின் தலைவன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

காந்தி நகரில் (Gandhi Nagar) பிடிபட்ட நபர்களின் விசாரணையின் அடிப்படையில், குஜராத் (Gujarat) மாநிலம் அம்ரேலியில் (Amreli) மற்றொரு இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது, அங்கு சோதனை நடந்து வருகிறது, மேலும் போதைப்பொருள்களும் கைப்பற்றப்படும் என்று கூறப்படுகிறது.

4-மெத்தில் மெத்காதினோன் (4-methylephedron) , 4-எம்.எம்.சி ( 4-MMC), மற்றும் 4-மெத்தில்பெட்ரோன் (4-methylephedron) எனப்படும் மெபெட்ரோன் (Mephedron) , ஆம்பெடமைன் (amphetamine) மற்றும் கேத்தினோன் (cathinone) ஆகியவை ராஜஸ்தான் (Rajasthan) மற்றும் குஜராத் (Gujarat) மாநிலங்களில் உள்ள ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட போது கைப்பற்றப்பட்டன. இந்த மருந்து பொருட்கள் மருந்து சந்தையில் ட்ரோன்(Drone), எம்-கேட் (M-Cat), ஒயிட் மேஜிக்(White Magic), மியாவ் மியாவ் (Miao Miao) என அறியப்படுகின்றன.

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Leave a comment