Chennai Police Commissioner Sandeep Rai Rathore Transferred ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் (Chennai Police Commissioner) சந்தீப் ராய் ரத்தோர் (Sandeep Rai Rathore ) இன்று (ஜூலை 8) அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
#BREAKING | சென்னை காவல் ஆணையர் அதிரடி மாற்றம்!#SunNews | #ChennaiPolice | @chennaipolice_ pic.twitter.com/ahKNysIht2
— Sun News (@sunnewstamil) July 8, 2024
சென்னை பெரம்பூரில், தமிழக பகுஜன் சமாஜ் கட்சி (Bahujan Samaj Party) தலைவர் ஆம்ஸ்ட்ராங் (Armstrong) கடந்த 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் சென்னையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால், சென்னை மாநகர காவல் ஆணையர் (Chennai Police Commissioner) சந்தீப் ராய் ரத்தோரை (Sandeep Rai Rathore ) பணியிட மாற்றம் செய்யும் உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. அவர் தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண் (DGP Arun) தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Also Read: LPG Gas Cylinder காஸ் வாங்கும் முறை முற்றிலும் மாறுகிறது.. இனி பழைய மாடல் இல்லை!