மாநகரப் பஸ் திடீரென தீப்பிடித்தது.. பீதியில் உறைந்த பயணிகள்.. சென்னை அடையாறில் பரபரப்பு | Adyar Running Bus Catches Fire

ரஃபி முகமது

Adyar Running Bus Catches Fire: சென்னையில் (Chennai) அடையாறு (#Adyar) பகுதியில் மாநகர பஸ் திடீரென தீப்பிடித்தது. எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் எல்பி சாலையில் மாநகர பஸ் தீப்பிடித்த சம்பவம், வாகன ஓட்டிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

சென்னையின் அடையாறு (Adyar) பகுதிக்கு சென்று கொண்டிருந்த மாநகர பஸ்சில் தீ ஏற்பட்டது. பயணிகள் சமயோசிதமாக சரியான நேரத்தில் இறக்கப்பட்டதால் பெரிய அளவிலான உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. விபரங்கள் பின்வருமாறு:

சென்னை பிராட்வேயிலிருந்து சீருசேரி வரை இயங்கும் 102 எண் வழித்தட மாநகர பஸ்கள் செல்கின்றன. பிராட்வேயிலிருந்து மரினா பீச், காமராஜர் சாலை, அடையாறு (#Adyar), திருவான்மியூர், பெருங்குடி, சீருசேரி வழியாக இந்த பஸ் கேளம்பாக்கம் வரை சென்றடையும்.

ஐடி நிறுவனங்கள் மையமாகக் கொண்ட பகுதிகளில் செல்லும் இப்பஸ் எப்போதும் நெரிசலாகவே இருக்கும். இந்த சூழ்நிலையில், இன்றைய வழக்கமான பாதையில் சென்று கொண்டிருந்த சென்னையின் ஒரு மாநகர பஸ், அடையாறு (Adyar) எல்பி சாலையில் பயணம் செய்யும் போது திடீரென தீப்பிடித்தது. அடையாறு (Adyar) டிப்போவுக்கு சென்றடையும்போது, கியர் பாக்ஸ் பகுதியில் புகை வெளியேறுவதை கண்ட கொண்டக்டர் மற்றும் டிரைவர், பயணிகளை உடனடியாக இறக்கும்படி அறிவுறுத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற தி டெய்லி ஸ்க்ரால் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பயணிகள் இறங்கிய சில நிமிடங்களில் பஸ் தீப்பிடித்து எரிந்து விட்டது. பஸ் முழுவதும் தீப்பற்றியது. இதனால், முழு பகுதியும் புகையாலேயே மூடப்பட்டு காணப்பட்டது. அருகிலுள்ள கடைகளில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர். தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சரியான நேரத்தில் பயணிகள் இறக்கப்பட்டதால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. சிஎன்ஜி பஸ் தீப்பிடித்துள்ளது. பஸ் எரிவாயு மூலம் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பிஸியான சாலையில் பஸ் தீப்பிடித்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற தி டெய்லி ஸ்க்ரால் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

 

Also Read: ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் 27 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம் | Hathras Stampede 27 Dead

Also Read: சாலையில் நிர்வாணமாக நடந்து செல்லும் பெண் viral video | போலீஸ் விசாரணை

Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version