விருதுநகர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து; நான்கு பேர் உயிரிழப்பு ! நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி | Virudhunagar Stone Quarry Accident

ரஃபி முகமது
Photo: ETV Bharat

Virudhunagar Stone Quarry Accident

Virudhunagar Stone Quarry Accident: விருதுநகர் (Virudhunagar) காரியாபட்டி (Kaariyappatti) அருகே ஆவியூர் (Aviyur)- கீழஉப்பிலிக் குண்டும் சாலையில் தனியார் கிரஷர் (கல்குவாரி) இயங்கி வருகிறது. இந்த குவாரியில், பாறைகளில் இருந்து ஜல்லி, மணல், போன்ற பொருட்கள் உடைக்கப்படுகின்றன.

அங்கு பாறைகளை உடைக்க வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று (புதன்கிழமை) அந்த குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பாறைகளை உடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட வெடிபொருட்களை வாகனத்தில் இருந்து வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்குள் இறக்கிய போது ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக (Virudhunagar Stone Quarry Accident) முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் (Virudhunagar Stone Quarry Accident)  4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெடிபொருட்கள் வைத்திருந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த இரண்டு வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இந்நிலையில், அப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதால், அப்பகுதிக்கு அருகில் தீயணைப்பு துறையினரும், போலீசாரும் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பின் போது (Virudhunagar Stone Quarry Accident) , ​​அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை அதிர்வுகளால் வீடுகள் சேதமடைந்தன. இந்த வெடிப்பு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.