Virudhunagar Stone Quarry Accident
Virudhunagar Stone Quarry Accident: விருதுநகர் (Virudhunagar) காரியாபட்டி (Kaariyappatti) அருகே ஆவியூர் (Aviyur)- கீழஉப்பிலிக் குண்டும் சாலையில் தனியார் கிரஷர் (கல்குவாரி) இயங்கி வருகிறது. இந்த குவாரியில், பாறைகளில் இருந்து ஜல்லி, மணல், போன்ற பொருட்கள் உடைக்கப்படுகின்றன.
விருதுநகர் அருகே நடைபெற்ற கல்குவாரி வெடி விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு pic.twitter.com/85m5wZqLCV
— Spark Media (@SparkMedia_TN) May 1, 2024
அங்கு பாறைகளை உடைக்க வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று (புதன்கிழமை) அந்த குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பாறைகளை உடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட வெடிபொருட்களை வாகனத்தில் இருந்து வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்குள் இறக்கிய போது ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக (Virudhunagar Stone Quarry Accident) முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கோர விபத்தில் (Virudhunagar Stone Quarry Accident) 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெடிபொருட்கள் வைத்திருந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த இரண்டு வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இந்நிலையில், அப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதால், அப்பகுதிக்கு அருகில் தீயணைப்பு துறையினரும், போலீசாரும் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பின் போது (Virudhunagar Stone Quarry Accident) , அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை அதிர்வுகளால் வீடுகள் சேதமடைந்தன. இந்த வெடிப்பு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.