Yercaud Bus Accident | ஏற்காடு (Yercaud) மலைப்பாதை 11வது கொண்டை ஊசி வளைவில் திருப்பும்போது ஏற்காட்டில் (Yercaud) இருந்து சேலம் (Salem) நோக்கி வந்த தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது (Bus Accident). இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://twitter.com/SparkMedia_TN/status/1785311012385923107
ஏற்காட்டில் (Yercaud) இருந்து சேலத்துக்கு (Salem) தனியார் பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. |
50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல், சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://twitter.com/vannumeena0/status/1785352252884185220