மூன்றாம் உலகப் போர் இன்னும் 3 வாரங்களில்? World War 3 in 3 Weeks

ரஃபி முகமது

World War 3 in 3 Weeks மூன்றாம் உலகப் போர் (World War 3) பற்றிய கருத்து பல வருடங்களாகவே தீவிர விவாதத்தின் தலைப்பாக உள்ளது. முதல் இரண்டு உலகப் போர்களின் அழிவுகரமான தாக்கங்கள் இன்னும் மக்களின் நினைவுகளை விட்டு அகலாத நிலையில் மற்றொரு உலகப் போர் பற்றிய செய்தி உலகை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வங்கா உட்பட பலர் மூன்றாம் உலகப் போர் (World War 3) பற்றிய கணிப்புகளைச் செய்துள்ளனர், ஆனால் அதன் சாத்தியம் நிச்சயமற்றதாகவே உள்ளது. இருப்பினும், அவ்வப்போது இதுபோன்ற கணிப்புகள் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனத்தை ஈர்க்கின்றன
.
இதன் வரிசையில் சமீபத்தில் இந்திய ஜோதிடர் குஷால் குமார் கூறிய “கணிப்பு” உலகை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது

அவர் கூற்றுப்படி மூன்றாம் உலகப் போர் (World War 3) இன்னும் 3 வாரங்களில் தொடங்கவுள்ளது.

குமார் ஒரு வேத ஜோதிடர் ஆவார்

2024 வட-தென் கொரியா, சீனா-தைவான், மத்திய கிழக்கு நாடுகள், அரபு-இஸ்ரேல் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போன்ற போர் முனைகளில் மே 8 இல் போர் நிலைமைகள் மிகவும் கவலைக்குரியதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

“சில நாடுகளில் ஆட்சி செய்ய அதிகாரம் பெற்ற சிலர், பெரும் கவலைக்குரிய எழுச்சியூட்டும் சூழ்நிலையை சமாளிப்பது கடினமாகவும் இருக்கலாம். சிலர் கடுமையாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் அல்லது ராஜினாமா செய்யக்கூடும். அரசியல் அரங்கில் எழுச்சிகளை நிராகரிக்க முடியாது. குறுகிய, பாதிக்கப்படக்கூடிய இடங்களில், தற்கால கிரக இயக்கங்கள் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை எடுக்க ராணுவம் முன்வரலாம் என்று தெரிவிக்கிறது,” என்று திரு குமார் மேலும் கூறினார்.

தனது பதிவில் 18 ஜூன் 2024 செவ்வாய்க்கிழமை அன்று மூன்றாம் உலகப் போர் (World War 3)  வெடிக்கும் என்றும் இருப்பினும் ஜூன் 10 மற்றும் 29 ஆம் தேதிகளிலும் மூன்றாம் உலகப் போர் (World War 3) வெடிக்கும் ” என்று அவர் கூறியுள்ளார்

பஞ்சகுலாவைச் சேர்ந்த திரு குமார், உலக நிகழ்வுகளை முன்னறிவிக்கும் ஜோதிடர் என்று தன்னை வர்ணித்துக் கொள்கிறார். இதனால் தான் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸியின் (Ebrahim Raisi) அகால மரணம் மற்றும்  உண்மையில் போர் வெடிக்கும் பட்சத்தில் பிரிட்டீஷ்காரர்களுக்கு என்ன தேவை என்பதை தெரிவிக்க UK அதிகாரிகள் இணையதளத்தை தொடங்கிய தகவல்கள் இந்த விஷயத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது..

Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version