TVKVIJAY – தமிழக வெற்றிக் கழகம் – திருத்தம் திருப்பம்

ரஃபி முகமது

TVKVIJAY – தமிழக வெற்றிக் கழகம் – திருத்தம் திருப்பம்

TVKVIJAY – தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சி பெயரை பிப்ரவரியில் அறிவித்த நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாது. தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்” என்று தெரிவித்திருந்தார்.

[xyz-ihs snippet=”vijay”]

பல்வேறு தரப்பினரும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த வேளையில், அவரது கட்சி பெயரில் இலக்கணப் பிழை இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பெயரில் பிழை திருத்தம் இருந்தது.. அதாவது வெற்றி என்பது நிலைமொழி, கழகம் என்பது வருமொழி. வெற்றி என்ற சொல்லில் ‘றி’ என்பது இகர ஈற்றுச் சொல். இகர ஈற்றுச் சொல்லைத் தொடர்ந்து க,ச,த,ப ஆகிய எழுத்துகளிலிருந்து ஏதேனும் ஒரு எழுத்து வந்தால் ஒற்று மிகும். எனவே வெற்றி+கழகம் = வெற்றிக்கழகம் என்றுதான் வரும்.

இந்தநிலையில், நேற்று (பிப்ரவரி 17) மாலை மலர் செய்தித்தாளில் தென் சென்னை மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் எந்தவித சப்ஜெக்ட்டும் இல்லாமல் கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிடப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் வட்டாரங்களை தொடர்புகொண்டு பேசிய போது, “பெயர்சொல் என்ற அடிப்படையில் க் இல்லாமல் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து நேர்மறையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து, தமிழ் அறிஞர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என்று திருத்தம் செய்யப்பட்டது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று கூறினர்.

இந்நிலையில், ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

[xyz-ihs snippet=”tvk”]

எனினும், தமிழக வெற்றி கழகம் கட்சியின் எக்ஸ் வலைதளம், முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version