TN 12th Result 2024 Direct Links: www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்தில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்களும், 8 ஆயிரத்து 190 தனித்தேர்வர்களும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 மையங்கள், 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்களும் 12ம் வகுப்பு மார்ச் 1 முதல் 22 வரை பொதுத்தேர்வை எழுதியுள்ளனர்
இதையடுத்து 86 மையங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அதன்பின், மாணவர்களின் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, மே 6ம் தேதி முடிவுகளை வெளியிட அரசு தேர்வுத்துறை தயாராக உள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2024 மார்ச் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் TN 12th Result 2024 மே 6ஆம் தேதி பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்.” என அறிவித்தார்
மாணவர்கள் www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை (TN 12th Result 2024) தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு பயன்படுத்தி உள்நுழையவும்
தேர்வு முடிவுகளை (TN 12th Result 2024) வெளியிடும் போது மாணவர்களுக்கான விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் பள்ளிகளில் மதிப்பெண்களை சரிபார்த்துக்கொள்ளும் வகையில், மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல்கள் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
தேர்வு முடிவுகளை (TN 12th Result 2024). கீழே கொடுக்கப்பட்டுள்ள வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்வையிடலாம்:
dge.tn.gov.in
tnresults.nic.in
விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றி முடிவுகளை (TN 12th Result 2024) பார்க்கலாம்
- தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: tnresults.nic.in, dge.tn.gov.in, http://apply1.tndge.org/dge-result-list
- முகப்புப் பக்கத்தில், ‘TN HSC முடிவு 2024‘ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து முடிவு இணைப்பைக் (ரிசல்ட் லிங்கை) கிளிக் செய்யவும்
- ரோல் எண் (Roll Number) மற்றும் பிறந்த தேதியை (Birth Date) பயன்படுத்தி உள்நுழையவும்
- தமிழ்நாடு HSC 2024 முடிவைச் சரிபார்க்க ‘சமர்ப்பி’ (Submit) என்பதைக் கிளிக் செய்யவும்
- அடுத்து மதிப்பெண் பட்டியல்களைப் பதிவிறக்கவும்