Tamil Nadu School Holidays 2024 in August: நாளை தொடங்கும் ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் பள்ளிகளுக்கான மொத்த விடுமுறை நாட்கள், பொது விடுமுறைகள் எப்போது, மொத்த வேலை நாட்கள் உள்ளிட்ட முழு விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் 2024-25 கல்வி ஆண்டு நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அனைத்து விவரங்களும் தரப்பட்டுள்ளது.
பள்ளியில் படிக்கும்போது சனி, ஞாயிறு விடுமுறையை தாண்டி ஏதேனும் ஒரு நாள் விடுமுறை கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் அனைவருக்கும் இருக்கும்.
புதிய மாதம் தொடங்கும்போது, வீட்டில் இருக்கும் காலெண்டரில் அந்த மாதத்தில் எத்தனை விடுமுறை நாட்கள் உள்ளன என்பதை பலரும் பார்க்கின்றீர்கள்.
ஒவ்வொரு மாதமும் பள்ளிகளுக்கு எந்தெந்த தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது என்பதை பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களும் அறிந்திருக்க வேண்டும்.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்பது கொண்டாட்டமே. தமிழக அரசின் அறிவிப்பின் அடிப்படையில் (Tamil Nadu School Holidays 2024), அடுத்த வரும் விடுமுறை நாட்கள் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.
Tamil Nadu School Holidays 2024: August Holiday Calender
ஆகஸ்ட் மாதத்தில் பள்ளி விடுமுறை நாட்களின் பட்டியல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கேற்ப பயணத் திட்டமிடல்களுக்கு தற்போதே தயாராகி வருகின்றனர். இதில் தென் மாநிலங்களுக்கு வேறு விதமாகவும், வட மாநிலங்களுக்கு மற்றொரு விதமாகவும் விடுமுறை விடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு,
ஜூன் 3 – சனி
ஜூன் 4 – ஞாயிறு
ஜூன் 11 – ஞாயிறு
ஜூன் 15 – வியாழன் (அரசு விடுமுறை – சுதந்திர தினம்)
ஜூன் 17 – சனி
ஜூன் 18 – ஞாயிறு
ஜூன் 25 – ஞாயிறு
ஜூன் 26 – திங்கள் (அரசு விடுமுறை – கிருஷ்ண ஜெயந்தி)
ஜூன் 31 – சனி
என ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு 10 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆகஸ்ட் 7 ஹரியாலி டீஜ், ஆகஸ்ட் 19 ரக்ஷா பந்தன், ஆகஸ்ட் 26 ஜன்மாஷ்டமி ஆகியவைகளுக்காக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது மாணவ, மாணவிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.