பொள்ளாச்சியில் பாஜக பணப்பட்டுவாடா

ரஃபி முகமது

Tamil Nadu Election 2024 Pollachi: பாஜக (BJP) பொள்ளாச்சியில் (Pollachi) பாஜக (BJP)பணப்பட்டுவாடா: ரூ.81,000 பறிமுதல்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் (Tamil Nadu Election 2024) நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ள நிலையில், பொள்ளாச்சியில் (Pollachi) வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த ஆலந்துறை பாஜக (BJP)! மண்டல தலைவர் ஜோதிமணியிடமிருந்து ரூ.81,000 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக (BJP) சார்பில் வசந்தராஜன் போட்டியிடுகிறார். இந்தநிலையில், வசந்தராஜனுக்கு வாக்கு கேட்டு கோவை பூலுவப்பட்டியில் மாரியப்பன் என்பவரது டீக்கடையில் ஆலந்துறை பாஜக (BJP) மண்டல தலைவர் ஜோதிமணி நேற்று இரவு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டிருப்பதாக, பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் காளீஸ்வரி, முத்துக்குமார் ஆகியோர் தலைமையிலான டீம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்துகொண்டிருந்த ஜோதிமணி மற்றும் பாஜக (BJP) மாநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோரை சுற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.81,000 பணம் மற்றும் பூத் சிலிப் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அப்போது கைப்பற்றப்பட்ட பணத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு, பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலந்துறை பாஜக (BJP) மண்டல தலைவர் ஜோதிமணி மற்றும் பாஜக (BJP)! மாநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உரிய விளக்கம் கொடுத்து பணத்தை பெற்று செல்லுமாறு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version