Tamil Nadu Election 2024 Perambalur: வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் (Tamil Nadu Election 2024) உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து மக்களிடையே விரிவான ஆய்வு நடத்தினோம்.
Tamilnadu Election Date 2024
Stages | Date |
வேட்புமனு தாக்கல் துவங்கும் நாள் | மார்ச் 30, 2024 |
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் | மார்ச் 27, 2024 |
வேட்புமனுக்கு பரிசீலனை | மார்ச் 28, 2024 |
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் | மார்ச் 30, 2024 |
பரப்புரை செய்ய கடைசி நாள் | ஏப்ரல் 17, 2024 |
தேர்தல் நாள் | ஏப்ரல் 19, 2024 |
வாக்கு எண்ணிக்கை | ஜூன் 04, 2024 |
Tamil Nadu Election 2024 பெரம்பலூர் (Perambalur) தொகுதியில் திமுக (DMK) சார்பில் கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, அதிமுக (ADMK) சார்பில் சந்திரமோகன், பாஜக (BJP) கூட்டணியில் ஐஜேகே (IJK) நிறுவனர் பாரிவேந்தர், நாம் தமிழர் கட்சி (NTK) சார்பில் தேன்மொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக (DMK), அதிமுக (ADMK), ஐஜேகே (IJK) ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிய போதிலும், ஒரு மெகா சர்வே மூலம் வாக்காளர்களின் உண்மையான உணர்வுகள் கண்டறியப்பட்டன.
500 வாக்காளர்களை உள்ளடக்கிய இந்த சர்வே,, பெரம்பலூர் (Perambalur) நாடாளுமன்றத் தொகுதியில் (Tamil Nadu Election 2024) உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் சமமாக விநியோகிக்கப்பட்டது, வயது பிரிவுகள் (18-30 வயது, 30-50 வயது மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்காளர் விருப்பத்தேர்வுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது உங்களுக்காக ,
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர், துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, குளித்தலை தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் …
பெரம்பலூர் (Perambalur) தொகுதியில்
திமுக (DMK) வின் அருண் நேரு 50% வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அதிமுக (ADMK) வேட்பாளர் சந்திரமோகன் 24% வாக்குகளைப் பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐஜேகே (IJK) நிறுவனர் பாரிவேந்தர், 21% வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் (NTK) தேன்மொழி 4% வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பதிலளித்தவர்களில் 1% பேர் நடுநிலைமையை வெளிப்படுத்தினர்.
இதனால், பெரம்பலூர் (Perambalur) தொகுதி (Tamil Nadu Election 2024) அருண் நேருவுக்கு சாதகமாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன, இது திமுக (DMK)வுக்கு வெற்றி வாய்ப்பளிக்கிறது
செய்திகளை உடனுக்குடன் பெற எங்களின் வாட்ஸ்ஆப் சேனலில் இணைந்திடுங்கள்