Tamil Nadu Election 2024 Dharmapuri: வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் (Tamil Nadu Election 2024) உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து மக்களிடையே விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
Tamilnadu Election Date 2024
Stages | Date |
வேட்புமனு தாக்கல் துவங்கும் நாள் | மார்ச் 30, 2024 |
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் | மார்ச் 27, 2024 |
வேட்புமனுக்கு பரிசீலனை | மார்ச் 28, 2024 |
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் | மார்ச் 30, 2024 |
பரப்புரை செய்ய கடைசி நாள் | ஏப்ரல் 17, 2024 |
தேர்தல் நாள் | ஏப்ரல் 19, 2024 |
வாக்கு எண்ணிக்கை | ஜூன் 04, 2024 |
Tamil Nadu Election 2024 இந்த தேர்தலில் தர்மபுரி (Dharmapuri)தொகுதியில்
திமுக (DMK) சார்பில் ஆர்.மணி களமிறங்கியுள்ளார்.
அதிமுக (ADMK)சார்பில் டாக்டர் அசோகன் போட்டியிடுகிறார்.
பாஜக (BJP) கூட்டணியில் பாமக (PMK) தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி செளமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சியின் (NTK) சார்பில் அபிநயா பொன்னிவளவன் போட்டியிடுகிறார்.
திமுக (DMK), அதிமுக (ADMK), பாமக (PMK)ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,
களநிலவரம் என்ன? உங்கள் மனதைத் தொட்ட வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தர்மபுரி தொகுதி மக்களிடம் முன்வைக்கப்பட்டது
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.
18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி) மற்றும் மேட்டூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…
திமுக (DMK) வேட்பாளர் ஆர்.மணி 37% வாக்குகளைப் பெற்று தர்மபுரி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்
பாமக (PMK) வேட்பாளர் செளமியா அன்புமணி 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்
அதிமுக (ADMK) வேட்பாளர் டாக்டர் அசோகன் 28% வாக்குகளைப் பெறுவார் .
நாம் தமிழர் கட்சி (NTK) வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன் 3% வாக்குகளைப் பெறுவார் .
1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆக…, தர்மபுரி தொகுதியில் இந்த முறை ஆர்.மணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது