Sunita Williams stuck in space இந்திய அமெரிக்க நாசா (NASA) விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் புட்ச் வில்மோர் (Butch Wilmore) ஆகியோர் தற்போது விண்வெளியில் சிக்கி பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் பத்திரமாகத் திரும்புவதற்கான வழியை நாசா (NASA) கண்டுபிடித்துக்கொண்டிருக்கும் வேளையில், ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்று துண்டு துண்டாக உடைந்து, விண்வெளி குப்பைகள் சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) தங்கியிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) நெருங்கியதால், போயிங்கின் ஸ்டார்லைனர் (Boeing Starliner spacecraft) விண்கலத்தில் தஞ்சம் அடையுமாறு இந்த பணியில் உள்ள அனைவரையும் நாசா (NASA) அவசரமாக கேட்டுக் கொண்டது
செய்திகளை உடனுக்குடன் பெற தி டெய்லி ஸ்க்ரால் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜூன் 6 ஆம் தேதி பூமியில் இருந்து புறப்பட்ட ஸ்டார்லைனர் (Starliner spacecraft) விண்வெளி கப்பல் தற்போது ISS இல் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செயலிழந்த ரஷ்ய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், RESURS-P1, 100 துண்டுகளாக உடைந்தது. இதனால் விண்வெளி வீரர்கள் ஒரு மணி நேரம் தங்கள் விண்கலத்தில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. செயற்கைக்கோள் திடீரென சேதம் அடைந்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
More trouble for #SunitaWilliams? #NASA fears #astronauts may stay months in #space: Here’s why 🧑🚀 https://t.co/bqp9LW8PFC pic.twitter.com/dMXkk6UTp5
— Economic Times (@EconomicTimes) June 29, 2024
இந்த நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் நடந்தது. நாசா (NASA) வின் விண்வெளி நிலைய அலுவலகம் இது விண்வெளி நிலையத்திற்கு அருகிலுள்ள சுற்றுப்பாதையில் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது , இதனால் அமெரிக்க விண்வெளி வீரர்களை தங்கள் விண்கலத்தில் தஞ்சம் அடைய நாசா (NASA) கேட்டுக்கொண்டது.
செயற்கைக்கோளை இயக்கிய ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் இன்னும் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தவில்லை. செயற்கைக்கோள் உடனடியாக “100 க்கும் மேற்பட்ட குப்பைகளை” உருவாக்கியது என்று நாசா (NASA) கூறியது.
ஸ்டார்லைனர் (Starliner spacecraft) விண்கலம் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது, நாசா (NASA) மற்றும் போயிங் இன்னும் திரும்பும் தேதியை வழங்கவில்லை. முன்னதாக ஜூன் 14 ஆம் தேதி பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது ஆனால் குளறுபடிகள் காரணமாக ஜூன் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற தி டெய்லி ஸ்க்ரால் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்த பணியின் மூலம், 2020 முதல் ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ டிராகனுடன் (SpaceX’s Crew Dragon) இணைந்து, விண்வெளி வீரர்களை ஐஎஸ்எஸ்க்கு அனுப்பும் திறன் கொண்ட இரண்டாவது அமெரிக்க விண்கலமாக ஸ்டார்லைனர் (Starliner spacecraft) மாற வேண்டும் என்று நாசா (NASA) விரும்புகிறது.
சாதாரண சூழ்நிலையில் ஸ்டார்லைனர் (Starliner spacecraft) 45 நாட்கள் வரை ISS இல் தங்கியிருக்க முடியும் என்று நாசா (NASA) தெரிவித்தது . இருப்பினும், தேவைப்பட்டால், இந்த கால அளவை 72 நாட்கள் வரை நீட்டிக்க முடியும். இது பொறியாளர்களுக்கு விண்கலத்தின் தொழில்நுட்ப சிக்கல்களைக் கண்டறிந்து தீர்க்க போதுமான நேரத்தை அனுமதிக்கும்.
Also Read: சாலையில் நிர்வாணமாக நடந்து செல்லும் பெண் viral video | போலீஸ் விசாரணை
Also Read: அதிபருக்கே சூனியம் செய்த அமைச்சர்! Maldives President black magic
செய்திகளை உடனுக்குடன் பெற தி டெய்லி ஸ்க்ரால் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…