ஸ்லோவாக்கியாவில் பிரதமர் துப்பாக்கியால் சுடப்பட்டார்! Slovakia PM Shot

ரஃபி முகமது
Photo: Reuters

Slovakia PM Shot மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஸ்லோவாக்கியாவின் (Slovakia) பிரதமர் ராபர்ட் பிகோ (Robert Fico)  பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்லோவாக்கியாவின் (Slovakia) பிரதமர் ராபர்ட் பிகோ (Robert Fico). இன்று, அவர் தலைநகர் ப்ரெஸ்டில்லாவின் (Bratislava) வடகிழக்கில் உள்ள ஹன்ட்லோவாவில் (Handlova) அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது பிரதமர் ராபர்ட் பிகோ (Robert Fico). மீது மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்தார். அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்லோவாக்கியாவின் (Slovakia) ஜனாதிபதி Zuzana Kaputova மற்றும் பாராளுமன்ற துணை சபாநாயகர் Lupus Palaha ஆகியோர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.