Senthil Balaji News சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் [Money laundering] கீழ் தொடரப்பட்ட வழக்கில் [Senthil Balaji Case], முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி [ Senthil Balaji News] கடந்த ஆண்டு ஜூன் 14 அன்று கைது [Senthil Balaji case] செய்யப்பட்டார். அமலாக்கத்துறை [Enforcement Directorate] கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
தற்போது, 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் [Supreme Court] செந்தில் பாலாஜிக்கு [ Senthil Balaji News] ஜாமீன் [Senthil Balaji bail] வழங்கியுள்ளது. கடந்த மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் தனது முடிவை அறிவித்தது. நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு செந்தில் பாலாஜியின் [ Senthil Balaji Case] மனுவை விசாரித்து ஜாமீன் வழங்க முடிவு செய்தது.
#அரசியல்POST | செந்தில் பாலாஜிக்கு ஜாமின் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு#SunNews | #SenthilBalaji | @mkstalin pic.twitter.com/40rqHSYLrs
— Sun News (@sunnewstamil) September 26, 2024
இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி [ Senthil Balaji Latest News] சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்த காரணத்தால், ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்த வழக்கில் 12 முறை வாதங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு இன்று செந்தில் பாலாஜிக்கு [ V Senthil Balaji Latest News] ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த முடிவு அவரது நீண்டகால சிறைவாசத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.