Senthil Balaji Latest News தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி (Senthil Balaji) , சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் (Enforcement Directorate) கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் ஜாமீன் பெற முடியாமல் ஒராண்டுக்கும் மேலாக சிறையில் வாடி வருகிறார்.
செந்தில் பாலாஜி (Senthil Balaji) யின் ஜாமீன் மனு தொடர்பான விசாரணை தற்போதைய நிலைக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த வழக்கை (Senthil Balaji Latest News) விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை (Enforcement Directorate) மற்றொரு நீதிமன்ற விசாரணையை சுட்டிக்காட்டி வழக்கை ஒத்திவைக்க கோரியதை கண்டித்தனர்.
SC reserves judgement on bail plea of former TN minister Senthil Balaji in money laundering case
Edited video is available on PTI Videos (https://t.co/L2D7HH309u) #PTINewsAlerts #PTIVideos @PTI_News pic.twitter.com/oQDo457HS9
— PTI News Alerts (@PTI_NewsAlerts) August 12, 2024
இன்று (ஆகஸ்ட் 12) நீதிமன்றத்தில் நடந்த தொடர்ச்சி விசாரணையில், செந்தில் பாலாஜி (Senthil Balaji) தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “அவர் தற்போது அமைச்சரல்ல, அதிகாரத்தில் இல்லாதவர், எனவே ஜாமீன் வழங்கப்பட வேண்டும்,” என வலியுறுத்தினார்.
அதற்கு நீதிபதி ஓகா, “செந்தில் பாலாஜி (Senthil Balaji) ஒராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளதால், அவரது ஜாமீன் மனு (Senthil Balaji Bail) மீது முதலில் தீர்ப்பு எடுக்க வேண்டியது அவசியம்,” என கருத்துத் தெரிவித்தார். மேலும், அமலாக்கத்துறை (Enforcement Directorate) தரப்பில் வாதிட்ட சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிற்கு நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பினர்.
முன்கணிப்பு குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு என்னவாகும்? என்ற கேள்வியை அமலாக்கத்துறை சரியாக பதிலளிக்கத் தவறியதால், நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.
செந்தில் பாலாஜி (Senthil Balaji) தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது, “இந்த வழக்கு ஆதாரமின்றி ஜோடிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியாக திருத்தப்பட்டவை,” என்றார். மேலும், அமலாக்கத்துறை (Enforcement Directorate) எப்போது இந்த வழக்கின் விசாரணையை தொடங்கும்? எனவும், அது 13 மாதங்கள் தாமதமானது ஏன்? எனவும் நீதிபதிகள் கேட்டனர்.
அமலாக்கத்துறை (Enforcement Directorate) 3 மாதங்களில் விசாரணை முடியும் என்று கூறிய நிலையில், நீதிபதி ஓகா, அதனை ஏற்க மறுத்தார். சமீபத்தில் மனிஷ் சிசோடியா வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீன் தீர்ப்பு செந்தில் பாலாஜி (Senthil Balaji) க்கு பொருந்துமா? என்ற கேள்வியும் நீதிபதிகளால் எழுப்பப்பட்டது.
இந்த வழக்கில், செந்தில் பாலாஜி (Senthil Balaji Latest News) 300 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார் மற்றும் அவர் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதையும் அவரின் தரப்பு வலியுறுத்தியது., நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பை அறிவிக்காமல், வழக்கை ஒத்திவைத்தனர்.