செந்தில் பாலாஜி ஜூலை 8ஆம் தேதி ஜாமீனில் விடுதலை? Senthil Balaji Case

ரஃபி முகமது
Photo | P Jawahar, EPS

Senthil Balaji Case செந்தில் பாலாஜி (Senthil Balaji ) , அமலாக்கத் துறைக்கு எதிரான வழக்கில் தாக்கல் செய்த வங்கி ஆவணங்கள் தொடர்பான மனுவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் (Chennai Principal Sessions Court)  ஜூலை 8 ஆம் தேதி உத்தரவு வழங்கும்

செந்தில் பாலாஜி (Senthil Balaji) , முன்னாள் அமைச்சர், கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில் கீழ் கைது செய்யப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றும் ஜாமீன் பெறாத நிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் உள்ளார். 

செந்தில் பாலாஜி (Senthil Balaji)  மீதான வழக்கை 4 மாதத்துக்குள் முடிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு (Chennai Principal Sessions Court)  சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) உத்தரவிட்டுள்ளது, அதற்கு மேல் தாமதம் செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Also Read: பெண் அரசியல்வாதிகள் குறிவைக்கும் போலி ஆபாசப் படங்கள்? Deepfake Pornography  Targetting Female politicians

செந்தில் பாலாஜி (Senthil Balaji)  சென்னை முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் (Chennai Principal Sessions Court)  அமலாக்கத் துறையின் வழக்குடன் தொடர்புடைய வங்கி ஆவணங்களை கோரியுள்ளார். ஜூலை 4 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம்  ஜூலை 8 ஆம் தேதி இந்த வங்கி  ஆவணங்கள் குறித்த உத்தரவை வெளியிடும் என்று அறிவித்தது.

செந்தில் பாலாஜி (Senthil Balaji)  இன்றுடன் 42வது நாளாக நீதிமன்ற காவலில் உள்ளார். அவர் சிறையில் இருந்து காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். செந்தில் பாலாஜி (Senthil Balaji) யின் காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் (Chennai Principal Sessions Court)  ஜூலை 8 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு வழங்கியது.

Also Read: ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் 27 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம் | Hathras Stampede 27 Dead

Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version