சமந்தாவை சிறையிலடைக்க வேண்டும் மருத்துவர் ஆவேசம் ! Samantha Ruth Prabhu Hydrogen Peroxide Inhalation

ரஃபி முகமது

Samantha Ruth Prabhu, தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறிய மருத்துவருக்கு பதிலளித்துள்ளார். சமந்தா (Samantha Ruth Prabhu), மயோசிட்டிஸ் (Myositis) எனும் தசை அழற்சி பாதிப்புக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, தன் உடல்நலனில் கவனம் செலுத்தி வரும் சமந்தா (Samantha Ruth Prabhu), தன் உடல் மற்றும் மன நலனைப் பற்றிய பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், சுவாச நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைட் (hydrogen peroxide) உள்ளிழுப்பானை (inhalation) பயன்படுத்துவது பற்றி அவர் பதிவிட்டார்.

இதற்கு The Liver Doc Hepatologist மருத்துவர் பிலிப்ஸ் கடுமையாக சாடி, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். “பிரபலமான  நடிகையான சமந்தா (Samantha Ruth Prabhu), மருத்துவ அறிவில்லாமல், மில்லியன் கணக்கான followerகளுக்கு சுவாச வைரஸ் தொற்றுகளைத் (respiratory viral infection) தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடை  (hydrogen peroxide)  உள்ளிழுக்க அறிவுறுத்துகிறார். அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான அறக்கட்டளை (The American Asthma and Allergy Foundation ), ஹைட்ரஜன் பெராக்சைடை  (hydrogen peroxide) நெபுலைஸ் (Nebulization) செய்து சுவாசிக்க வேண்டாம் என எச்சரிக்கிறது. அது உடல்நலத்திற்கு ஆரோக்கியமற்றது. இந்த முற்போக்கான சமூகத்தில், சமந்தாவின் (Samantha Prabhu) பதிவு பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கிறது. அவருக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்க வேண்டும். இந்தியாவின் சுகாதார அமைச்சகம் அல்லது ஏதேனும் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு இந்த சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்களிடம் இருந்து மக்களை காக்குமா அல்லது மக்கள் இறக்க அனுமதிக்குமா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள சமந்தா (Samantha Ruth Prabhu), “கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பலவகையான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. தகுதி வாய்ந்த நிபுணர்களின் ஆலோசனையின்படி, மற்றும் என்னைப் போன்ற சாதாரண நபர் முடிந்தவரை சுய ஆராய்ச்சி செய்த பிறகு இதை எடுத்துக்கொண்டேன். இந்த மருந்துகள் அனைத்தும் விலை உயர்ந்தவை. இவற்றை பெற என்னால் செலவு செய்ய முடிந்தது, ஆனால் இவற்றை முடியாதவர்களை எண்ணி வருந்துகிறேன். நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக என்ன தெரிந்துகொண்டேனோ, அதை நல்ல எண்ணத்தில் பரிந்துரை செய்தேன்.

Samantha Ruth Prabhu

இந்த சிகிச்சை ஒரு எம்.டி.யாக இருக்கும் உயர் தகுதி வாய்ந்த மருத்துவரால் எனக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவர் டிஆர்டிஓவில் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஆனால் ஒரு ஜென்டில்மேன் கடுமையான வார்த்தைகளால் என்னைப் பற்றி பேசியுள்ளார். அந்த ஜென்டில்மேன் ஒரு மருத்துவரும் கூட. அவருக்கு என்னை விட அதிகம் தெரியும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அவருடைய நோக்கம் சரியானது என நம்புகிறேன், ஆனால் அவர் கொஞ்சம் பார்த்து பேசியிருக்கலாம். என்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார், அதை நான் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற தி டெய்லி ஸ்க்ரால் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நான் ஒரு நட்சத்திரமாக இதைப் பதிவிடவில்லை, ஒரு சிகிச்சை கோரும் நபராகவே பதிவிட்டேன். யாரையோ அங்கீகாரிக்கவோ அல்லது பணத்துக்காகவோ பதிவிடவில்லை. வழக்கமான மருத்துவ முறை வேலை செய்யாதவர்களுக்கு, குறைந்த விலையில் இருக்கும் இந்த சிகிச்சையை நான் பரிந்துரைத்தேன், அவ்வளவு தான்.

நான் பதிவில் குறிப்பிட்ட என் மருத்துவரை அவர் பணிவுடன் அழைத்து பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இரண்டு உயர் தகுதி வாய்ந்த நிபுணர்களுக்கு இடையிலான அந்த விவாதம் மற்றும் கலந்துரையாடலில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனது ஆரோக்கியத்திற்கு உதவிய சிகிச்சைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களுக்கு உதவுவதே எனது நோக்கம். யாருக்கும் தீங்கு செய்ய அல்ல,” என நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.