Quarterly Holidays in Tamilnadu 2024 மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! காலாண்டு விடுமுறை நீட்டிப்பு அறிவிப்பு (Quarterly Holidays in Tamilnadu 2024) வெளியாகியுள்ளது.
2024-25 கல்வி ஆண்டுக்கான தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் விரைவில் வெளியிடப்பட்டதோடு, வேலை நாட்களின் எண்ணிக்கையும் 210 நாட்களிலிருந்து 220ஆக அதிகரிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனையடுத்து, வேலை நாட்கள் மீண்டும் 210 நாட்களாக குறைக்கப்பட்டது.
Follow for Daily News Update: The Daily Scroll Breaking News
தற்போது, காலாண்டு தேர்வுகள் அனைத்து பள்ளிகளிலும் நடந்து வரும் நிலையில், எதிர்வரும் 27ஆம் தேதி தேர்வுகள் நிறைவடையும். இதன் பின்னர், 28ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு 5 நாட்கள் காலாண்டு விடுமுறை (Quarterly Holidays in Tamilnadu 2024) என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆசிரியர் சங்கங்கள் மேலும் விடுமுறை நாட்களை வழங்க வேண்டுமென கோரியதையடுத்து, காலாண்டு விடுமுறையை நீட்டிக்க பள்ளிக்கல்வித்துறை விரைவில் முடிவு செய்யும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அக்டோபர் 7ஆம் தேதி வரை விடுமுறை (Quarterly Holidays in Tamil Nadu 2024) நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், 5 நாட்களுடன் கூடுதலாக 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு, மொத்தம் 9 நாட்கள் விடுமுறையாகிறது.
இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.