Pregnant Woman Dies Falling From Express Train: சென்னையில் (Chennai) இருந்து கொல்லம் (Kollam) நோக்கி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தபோது, உளுந்தூர்பேட்டை (Ulundurpet) – விருத்தாசலம் (Vridhachalam) இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் வழுக்கி விழுந்து உயிரிழந்தார் (Pregnant Woman Dies Falling From Express Train).
தென்காசி (Thenkasi) அருகே மேல்நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணி. இவர்கள் சென்னையில் வசித்து வந்த நிலையில், கஸ்தூரி தனது குடும்பத்துடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சங்கரன்கோவிலுக்கு கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்தார்.
கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது கஸ்தூரிக்கு திடீரென வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ரயிலின் படிக்கட்டு பகுதிக்கு சென்ற அவர், கதவு ஓரத்தில் வாந்தி எடுக்க முயன்றார். அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது (Pregnant Woman Dies Falling From Express Train).
இதில் அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்தார். கஸ்தூரி ரயிலில் இருந்து விழுந்ததை பார்த்த உறவினர்கள், உடனடியாக அபாய சங்கிலியை இழுக்க முயன்றனர். ஆனால் அது பலனளிக்காததால், பக்கத்து பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நடுவழியில் நிறுத்தினர்.
அப்போது அவரது உறவினர்கள் அலறியடித்து கஸ்தூரியை தேடி வந்தனர். ஆனால் அதற்குள் ரயில் சில கி.மீ., கடந்து சென்றதால் அவரைக் காணவில்லை. பின்னர் அங்கிருந்து விருத்தாசலம் நோக்கி ரயில் சென்றது. பின்னர் கஸ்தூரியின் உறவினர்கள் கஸ்தூரியை மீட்டு தருமாறு போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் அவர் விழுந்த பகுதிக்கு விரைந்த போலீசார் சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடலை மீட்டனர். இதில் தவறி விழுந்த கஸ்தூரி பலத்த காயம் அடைந்து இறந்து கிடந்தார் (Pregnant Woman Dies Falling From Express Train). இதையடுத்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஞாயிற்றுக்கிழமை கஸ்தூரியில் இறந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். கோவில் திருவிழா மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் வழியில், கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.