Officials Meeting Rahul Gandhi டெல்லியில் (New Delhi) உள்ள ஐஏஸ் அதிகாரிகள் ராகுல் காந்தியை (Rahul Gandhi) சந்திக்கத் தொடங்கியுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் (Lok Sabha Elections 2024) இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சனிக்கிழமை மாலை எந்தக் கட்சி வெற்றி பெறும் என தெரிய வரும். ஆனால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பல ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரியும்.
தேசிய அளவில் லோக்சபா தேர்தலின் (Lok Sabha Election 2024) தீவிரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்களும், பிரசாரங்களும் மும்முரமாக நடந்து வருகிறது. இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் மும்முரமாக நடந்து வருகிறது.
நடப்பு லோக்சபா தேர்தலின் (Lok Sabha Elections 2024) ஏழாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு நாளான ஜூன் 1ம் தேதி இந்திய கூட்டணியின் முக்கிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், நம்மிடம் பேசிய டெல்லி காங்கிரஸ் (Congress Party) நிர்வாகிகள் சிலர், காங்கிரஸ் கட்சி வெற்றி பெறப் போகிறது என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என தெரிந்து
ஐஏஸ் அதிகாரிகள் டெல்லியில் ராகுல் காந்தியை (Rahul Gandhi) சந்திக்க தொடங்கியுள்ளனர். ஆட்சி மாறப்போகிறது என்பதை உணர்ந்து அதிகாரிகள் தங்களை காப்பாற்ற தயாராக உள்ளனர்.
இதற்கு முன் இப்படி நடந்ததில்லை. ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறியுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் (Lok Sabha Election 2024) 7 கட்டங்களாக நடக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட தேர்தல்களில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைவு. இந்நிலையில் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் கடந்த வாரம் 4வது கட்ட தேர்தல் நடைபெற்றது. ஆந்திராவில் 25 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 67.25 சதவீத வாக்குகள் பதிவாகின.
கடந்த வாரம் 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் (Lok Sabha Elections 2024) நடைபெற்றது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற 6-வது கட்ட தேர்தலில் 61.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்கிறது.தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வருகிறது.