Nepal Landslide : நேபாளத்தின் (Nepal) பொகாராவில் (Pokhara) வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் (Nepal Landslide) இரண்டு பயணிகள் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவம் நாராயண்காட் – முகிலிங் சாலை (Narayanghat-Mugling road) பிரிவின் சிமால்டலில் (Simaltal) நடந்துள்ளது. காத்மாண்டு நோக்கிச் சென்ற ஏஞ்சல் பேருந்தும், தலைநகரில் இருந்து கூர் நோக்கிச் சென்ற கணபதி டீலக்ஸ் வாகனமும் அதிகாலை 3.30 மணியளவில் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக சித்வான் மாவட்ட முதன்மை அதிகாரி இந்திரதேவ் யாதவ் தெரிவித்துள்ளார். காத்மாண்டு நோக்கிச் செல்லும் பேருந்தில் 24 பேரும் மற்றைய பேருந்தில் 41 பேரும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கணபதி டீலக்ஸில் பயணித்த மூன்று பயணிகள் பேருந்தில் இருந்து குதித்து தப்பினர். இந்த விபத்தில் 7 இந்திய குடிமக்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
A landslide swept two buses carrying an estimated 63 passengers, on Madan-Ashrit Highway in Central Nepal into the Trishuli River, this morning.
(Source: Road Division Office, Bharatpur, Nepal) https://t.co/1LZ1qYcXcQ pic.twitter.com/1xSFDB5uZY
— ANI (@ANI) July 12, 2024
இந்திரதேவ் யாதவ் ANI இடம் கூறுகையில், “முதற்கட்ட தகவலின்படி, இரண்டு பேருந்துகளிலும் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்தனர். மாலை 3:30 மணியளவில் நிலச்சரிவில் (Nepal Landslide) பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. நாங்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருக்கிறோம். தொடர்ந்து மழை பெய்து வருவதால், “காணாமல் போன பேருந்துகளை கண்டுபிடிப்பதற்கான எங்கள் முயற்சிகளுக்கு இது தடையாக உள்ளது”.
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’ (Nepal Prime Minister Pushpa Kamal Dahal Prachanda) பயணிகளை தேடி மீட்க அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். “நாராயண்கர்-மக்லின் சாலையில் நிலச்சரிவுகளில் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதில் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சொத்துக்கள் சேதம் அடைந்ததில் சுமார் ஐந்து டஜன் பயணிகள் காணாமல் போன செய்தியால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என்று டஹல் ட்விட்டரில் எழுதினார். பயணிகளைத் தேடி அவர்களை திறம்பட மீட்குமாறு உள்துறை நிர்வாகம் உட்பட அரசாங்கத்தின் அனைத்து நிறுவனங்களுக்கும் நான் அறிவுறுத்துகிறேன்.
இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக காத்மாண்டுவில் இருந்து பரத்பூர் செல்லும் அனைத்து விமானங்களும் அன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று நேபாள உள்துறை அமைச்சக அதிகாரிகள் கடந்த வாரம் தெரிவித்தனர் நேபாளத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து மழை (Nepal Flood) தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 62 பேர் இறந்துள்ளனர் மற்றும் 90 பேர் காயமடைந்துள்ளனர்.