சிபிசிஐடி விசாரணை வளையத்தில் நயினார் நாகேந்திரன்

ரஃபி முகமது

Nainar Nagendran Case for Cash Seize Transfer To CBCID: சென்னை தாம்பரம் (Chennai Tambaram) ரயில் நிலையத்தில் பாஜக (BJP)  வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு (Nainar Nagendran)  தொடர்புள்ளவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை (Nainar Nagendran Case) தமிழக அரசு சிபிசிஐடிக்கு (CBCID)  மாற்றியுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான (Lok Sabha Election 2024) வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முடிந்த நிலையில், அதற்கு முன் 7ம் தேதி லோக்சபா தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில்  (Chennai Tambaram Railway Station) நெல்லை விரைவு ரயிலில் (Nellai Express Train) தேர்தல் பறக்கும் படை (Election Flying Squad) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி 3 கோடியே 99 லட்சம் ரூபாயை கொண்டு சென்ற 3 பேர் பிடிபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நெல்லை மக்களவை தொகுதி (Nellai Lok Sabha Constituency)  பாஜக (BJP)  எம்.எல்.ஏ.வும், பாஜக (BJP)  வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு (Nainar Nagendran) சொந்தமான ஓட்டலில் பணிபுரியும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சதீஷிடம் நடத்திய விசாரணையில், நெல்லை லோக்சபா பாஜக (BJP)  வேட்பாளரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக (Nainar Nagendran) நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் (Nellai Express Train) பணம் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நெல்லை மற்றும் சென்னையில் உள்ள பாஜக (BJP)  வேட்பாளர் நயினார்  நாகேந்திரனுக்கு (Nainar Nagendran) சொந்தமான ஓட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் (Election Flying Squad) சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்காக (Nainar Nagendran) பணம் கடத்தியதாக சதீஷ் வாக்குமூலம் அளித்ததை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு நெல்லை லோக்சபா தொகுதி நயினார் நாகேந்திரனுக்கு (Nainar Nagendran) தாம்பரம் போலீசார் (Tambaram Police) சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran)  தரப்பு வழக்கறிஞர் காவல் நிலையத்தில் ஆஜராகி தாம்பரம் இன்ஸ்பெக்டர் பாலமுரளியிடம் மனு அளித்தார். அந்த மனுவில், நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) ஆஜராக 10 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மறுபுறம் ரயிலில் சிக்கிய பணத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு (CBCID) மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் (Shankar Jiwal) உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து தாம்பரம் போலீசார்  (Tambaram Police)  வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடியிடம் (CBCID) ஒப்படைக்க உள்ளனர்.

விசாரணைக்கு நயினார் நாகேந்திரன்  நயினார் நாகேந்திரன் ஆஜராகியிருந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு (CBCID) மாற்றப்பட்டது. இந்த ரூ.4 கோடி யாருக்கு சொந்தமானது, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி (CBCID) மூலம் விசாரணை அதிகாரி விரைவில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version