Mohan Charan Majhi Becomes Orissa CM அனைத்து சஸ்பென்ஸுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ஒடிசா (Orissa) வின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜியை (Mohan Charan Majhi) பாஜக (BJP) செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) அறிவித்தது. கியோன்ஜார் (Keonjhar) தொகுதி எம்.எல்.ஏ.வான இவர், ஒடிசா (Orissa) சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைமைக் கொறடாவாகவும் பதவி வகித்தவர். இதன் மூலம் ஒடிசாவில் (Orissa) 24 ஆண்டுகாலம் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த ஒடிசா (Orissa) சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவிடம் (BJP) நவீன் பட்நாயக்கின் (Naveen Patnaik) பிஜேடி (BJD) தோல்வியடைந்தது.
#WATCH | Mohan Charan Majhi elected as the Leader of BJP Legislative Party in Odisha. He will be the new CM of the state. pic.twitter.com/tDMART1zN7
— ANI (@ANI) June 11, 2024
இதற்கான அறிவிப்பை ராஜ்நாத் சிங் (Rajnath SIngh) செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
#WATCH | Bhubaneswar | Mohan Charan Majhi to be Chief Minister of Odisha, announces BJP leader Rajnath Singh. pic.twitter.com/5fBKDijVjZ
— ANI (@ANI) June 11, 2024
மோகன் சரண் மாஜி (Mohan Charan Majhi) யார்?
52 வயதான மோகன் சரண் மாஜி (Mohan Charan Majhi) பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். கியோன்ஜார் (Keonjhar) சட்டமன்ற தொகுதியில் இருந்து நான்கு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அவர் ஜனவரி 6, 1972 இல் பிறந்தார். அவர் பட்டப்படிப்பு (BA) பட்டம் பெற்றவர். உத்தியோகபூர்வ பதிவுகள் அவரது தொழிலை “விவசாயி” என்று காட்டுகின்றன.
அவர் தனது இளம் நாட்களில் ஒரு கால்பந்து வீரராகவும் இருந்தார் மற்றும் கியோன்ஜாரில் உள்ள ரைகலா, ரைசிங் ஸ்டார் கிளப்பை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
1997- 2000-ல் சரபஞ்சாப் ஆன பிறகு மாநில அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தார். பாஜக (BJP) மாநில ஆதிவாசி மோர்ச்சா செயலாளராகவும் இருந்தார். அவர் கட்சியின் பழங்குடி முகமாகவும் இருந்து வருகிறார் மற்றும் ஒடிசா (Orissa) வில் பாஜக (BJP) SC/ST பிரிவை வழிநடத்தியுள்ளார். கியோன்ஜார் (Keonjhar) மாநிலத்தில் உள்ள ரெய்காலாவில் வசிக்கிறார்.
துணை முதல்வராக கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய கனக் வர்தன் சிங் தியோ, ஆளுநரை சந்தித்த பிறகு மேலும் பேசுவோம். ஒடிசா (Orissa) வில் 4.5 கோடி மக்கள் பாஜக (BJP) வை இங்கு ஆட்சிக்கு கொண்டு வந்ததற்கு பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளோம். அவர்கள் பிரதமர் மோடியின் வார்த்தைகளை நம்பினர். எங்களுக்கு அதிகாரம் கொடுத்ததுள்ளனர் ஒடிசா (Orissa) வை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவது பற்றி பிரதமர் மோடி பேசினார், அதை நாங்கள் முன்னெடுப்போம்.” என்றனர்
#WATCH | Bhubaneswar: BJP MLA Mohan Charan Majhi to be the new CM of Odisha. Kanak Vardhan Singh Deo and Pravati Parida to be the Deputy Chief Ministers.
Kanak Vardhan Singh Deo says, "We will speak more after meeting the Governor. We have expressed gratitude to the public that… pic.twitter.com/PelCcEf2fj
— ANI (@ANI) June 11, 2024
சமீபத்தில் முடிவடைந்த ஒடிசா (Orissa) சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியலில் பிஜேடி (BJD) மற்றும் நவீன் பட்நாயக்கின் (Naveen Patnaik) இரண்டு தசாப்த கால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் 78 இடங்களை பாஜக (BJP) கைப்பற்றி, பெரும்பான்மையை எட்டியதால், பிஜேடி 51 இடங்களாகக் குறைக்கப்பட்டது, 14 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பட்நாயக் அவர்களே ஹிஞ்சிலி தொகுதியில் வெற்றி பெற்றார் ஆனால் காந்தபாஞ்சியில் தோல்வியடைந்தார். தேர்தலுக்குப் பிறகு பிஜேடி (BJD) எம்எல்ஏக்களுடன் நடத்திய கூட்டத்தில், “ஒடிசா (Orissa) மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும்” என்று பட்நாயக் (Naveen Patnaik) கேட்டுக் கொண்டார்.