Lok Sabha Elections 2024 Zee News Uturn: சமூக ஊடக தளமான ட்விட்டர்/Xல் ZEE தொலைக்காட்சி நெட்ஒர்க்கில் தற்போது நடைபெற்று வரும் மாற்றங்கள் பற்றிய விவாதங்கள் வைரலாகி வருகிறது.. ஜீ நியூஸின் தலைமை நிர்வாக அதிகாரி அபய் ஓஜா ராஜினாமா செய்து விட்டார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பேரணிகளை 48 மணி நேரத்திற்கும் மேலாக ZEE செய்தி ஒளிபரப்பவில்லை என பல பத்திரிக்கையாளர்கள் மற்றும் ட்விட்டர்/X இல் பதிவுகள் வைரலாகி வருகின்றன
லோக்சபா தேர்தல் 2024 (Lok Sabha Elections 2024) நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) நெருக்கமானதாகக் கருதப்பட்ட சேனலில் ஏற்பட்ட மாற்றங்கள் இயல்பாகவே பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளன
.
அபய் ஓஜா ராஜினாமா செய்வதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ZEE செய்தியின் தலைமை நிர்வாக அதிகாரியாக டாக்டர் இட்ரிஸ் லோயா இப்போது பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்திரிக்கையாளரும், தொலைக்காட்சி நிபுணருமான பிரதீப் பண்டாரியின் செய்தி நிகழ்ச்சிகளையும் வரும் நாட்களில் நிறுத்துமாறு கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://twitter.com/RoshanKrRaii/status/1787371178937487641
மே 3, வெள்ளியன்று உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் ZEE செய்தி நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திராவின் வீடியோவும் இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. அந்த வீடியோவில், பத்திரிக்கை சுதந்திரம் குறித்த குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 159 வது இடத்தில் உள்ளது என்ற உண்மையை சந்திரா கூறி அதனை கண்டித்தார்.
My thoughts on the #WorldPressFreedomDay.
Let’s celebrate the power of a free press in upholding democracy, promoting transparency, and safeguarding our right to information. As an integral part of the media industry, I stand with all the journalists worldwide in their pursuit of… pic.twitter.com/3hUXTJwf8r
— Subhash Chandra (@subhashchandra) May 4, 2024
100-150 கோடிக்கும் அதிகமான மக்கள் ஜீ நியூஸைப் பார்க்கிறார்கள் என்றும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் சந்திரா அந்த வீடியோவில் கூறினார். இருப்பினும், அவரது திடீர் மாற்றமும் செய்தியின் தொனியும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மே 5 அன்று சந்திராவின் ட்வீட் நெருப்பில் எண்ணெய் சேர்க்கும் வேலையைச் செய்தது.
Saw the play ‘Mere Ram’ a powerful line by dying Ravan “मेरे पतन का कारण मुझे अपने ज्ञान का अहंकार था और राम को अहंकार का ज्ञान था” हमे इसे समझ कर अपने व्यवहार में बदलाव करने में ही लाभ है। जय भारत
— Subhash Chandra (@subhashchandra) May 5, 2024
அந்த டிவீட்டின் அர்த்தம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
‘மேரே ராம்’ நாடகத்தில் ராவணன் இறக்கும் போது கூறும் ஒரு சக்திவாய்ந்த வரியைப் பார்த்தேன் “என் வீழ்ச்சிக்கு காரணம் எனது அறிவு ஆணவம், ராமனுக்கு ஆணவத்தின் அறிவு இருந்தது” இதைப் புரிந்துகொண்டு நம் நடத்தையை மாற்றுவதன் பலன் நமக்கு உண்டு. ஜெய் பாரத்
X இல் பல பதிவுகள் ZEE செய்தியில் ஏற்பட்ட மாற்றம் , செய்தி நிறுவனங்கள் ஆட்சி மாற்றத்தை உணரத் தொடங்கியதற்கான அறிகுறிகள் என்றும், மற்ற சேனல்கள் இதைப் பின்பற்றுவதற்கு சிறிது நேரம் ஆகும் என்றும் கூறியது. ZEE செய்திகள் நாட்டிலுள்ள மிகப் பழமையான தனியார் தொலைக்காட்சி செய்தி வலைப்பின்னல்களில் ஒன்றாக இருப்பதால், ஊடக நிறுவனத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொழில்துறையினராலும் பார்வையாளர்களாலும் நெருக்கமாகப் பின்பற்றப்படுகின்றன