Lok Sabha Election 2024 Orissa: Modi Criticizes Tamil Nadu ஒடிசாவில் (Orissa) லோக்சபா தேர்தல் (Lok Sabha Election 2024) பிரசாரத்தின் போது, தமிழகத்தை (Tamil Nadu) பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) திடீரென தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் (Lok Sabha Elections 2024) 7 கட்டங்களாக நடக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட தேர்தல்களில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைவு. இந்நிலையில் கடந்த வாரம் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் 4வது கட்ட தேர்தல் நடைபெற்றது. ஆந்திராவில் 25 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 67.25 சதவீத வாக்குகள் பதிவாகின.
நேற்று 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகியுள்ளன.
- பீகார் 55.62%
- ஜம்மு & காஷ்மீர் 58.79%
- ஜார்கண்ட் 63.89%
- லடாக் 72.02%
- ஒடிசா 69.43
- % மகாராஷ்டிரா 54.33%
- உபி 57.79%
- மேற்கு வங்கம் 76.64%.
தற்போது 6 மற்றும் 7வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 6வது கட்ட தேர்தல் மே 25ம் தேதி நடைபெற உள்ளது. 8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (UTs) மொத்தம் 889 வேட்பாளர்கள் ஆறாவது கட்ட மக்களவை தேர்தலில் போட்டியிடுவார்கள் என இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது.
ஒடிசா பிரச்சாரம்: இந்த நிலையில்தான் ஒடிசாவில் (Orissa) லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் (Lok Sabha Election 2024) பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) திடீரென தமிழகத்தை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் நவீன் பட்நாயக்கின் (Naveen Patnaik) நெருங்கிய உதவியாளரும், தமிழகத்தைச் சேர்ந்த பிஜேடியின் முக்கிய தேர்தல் வியூகவாதியுமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியனை (V. K. Pandian) மறைமுகமாக விமர்சித்த மோடி, பூரி ஜெகநாதர் கோவிலின் ரத்ன பண்டரின் (புதையல்) சாவியை தமிழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது . இங்கே இருக்க வேண்டிய திறவுகோல் தமிழ்நாட்டில் உள்ளது.
சொந்த வீட்டின் சாவி கிடைக்காத போது, ஜெகநாதரை வேண்டிக் கொண்டு, சாவியைக் கண்டுபிடிக்கும்படி வேண்டுகிறோம்… ஆனால், ரத்ன பந்தரின் சாவி ஆறு வருடங்களாகக் காணவில்லை. நாங்கள் எங்கு சென்று புகார் செய்வது? ஸ்ரீ ரத்ன பண்டாரின் சாவி தமிழகத்திற்குப் போய்விட்டதாக மக்கள் சொல்கிறார்கள். தமிழகத்திற்கு அனுப்பியது யார்?
இங்குள்ள விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். இளைஞர்கள் வேலைக்காக வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றனர். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கனிம வளங்கள் ஏராளமாக இருந்தாலும், இடம்பெயர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வளங்கள் இருந்தும் இங்குள்ள மக்கள் ஏன் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்? ஒடிசா மாநிலத்தைப் பார்த்து வருத்தமாக இருக்கிறது.
ஒடிசாவின் பரிதாப நிலைக்கு யார் பொறுப்பு? BJD அரசாங்கம் சில ஊழல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு சில ஊழல்வாதிகள் முதல்வர் அலுவலகம் மற்றும் இல்லத்தை ஆக்கிரமித்துள்ளனர். பிஜேடியின் சிறு தொழிலாளர்கள் இப்போது கோடீஸ்வரர்களாகிவிட்டனர் என்று பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) குறிப்பிட்டார்.
சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் நடந்த பிரசாரத்திலும் தமிழக கட்சியினர் உத்தரபிரதேசத்தை கிண்டல் செய்து விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திற்கான லோக்சபா தேர்தல் முதற்கட்டமாக நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.