மகாராஷ்டிராவில் வீசிய மோடி எதிர்ப்பு அலை | Lok Sabha Election 2024 Maharashtra BJP Losing

ரஃபி முகமது

Lok Sabha Election 2024 Maharashtra BJP Losing தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில்  மகாராஷ்டிராவில் பாஜக (BJP)  குறைந்தது 28 தொகுதிகளை இழக்கும் என்று தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலுக்கான (Lok Sabha Elections 2024 Maharashtra) வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாநிலத்தில் கிராமப்புற மக்கள் தொகை 55% ஆகும். நகர்ப்புற மக்கள் தொகை 45%.

இந்த மாநிலத்தில் சிவசேனா (Shiv Sena) , தேசியவாத காங்கிரஸ் (Nationalist Congress Party) , பாஜக (BJP) , காங்கிரஸ் (Congress Party) ஆகிய கட்சிகள் பலம் வாய்ந்த கட்சிகள். ஆனால், இந்தத் தேர்தல் களத்தில் சிவசேனா (Shiv Sena) வும், தேசியவாத காங்கிரஸ் (Nationalist Congress Party)  கட்சியும் இரண்டாகப் பிரிந்து தேர்தலைச் சந்திக்கின்றன.

மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே (Eknath Shinde)  தலைமையிலான சிவசேனா (Shiv Sena)  கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். இருப்பினும், பாஜக (BJP)  கூட்டணியில் அவருக்கு கிட்டத்தட்ட 15 இடங்கள்தான்  ஒதுக்கப்பட்டன.

அதேபோல் துணை முதல்வர் அஜித் பவார் (Ajith Pawar)  10 இடங்கள் கேட்டார். அவருக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

ஏக்நாத் ஷிண்டே (Eknath Shinde) வுக்கு சிவசேனா (Shiv Sena) வின் அதிகாரப்பூர்வ சின்னம் உள்ளது. அதேபோல், தேசியவாத காங்கிரஸ் (Nationalist Congress Party)  கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னம் அஜித் பவாரிடம் (Ajith Pawar)   உள்ளது. இவர்கள் குறைந்த தொகுதிகளில் அதிகாரப்பூர்வ சின்னத்தில் போட்டியிட்டனர்.

மாறாக, உத்தவ் தாக்கரேவின் (Uddhav Thackeray)  சிவசேனா (Shiv Sena)  21 தொகுதிகளில் போட்டியிட்டது. சரத்பவார் (Sharad Pawar) கட்சி 10 இடங்களில் நிற்கிறது. காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிட்டது. இதனால் இந்த மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணி எந்த பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை சந்தித்துள்ளது.

ஆனால் பாஜக (BJP) வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அப்படி இல்லை. சீட் பங்கீட்டில் அஜித் பவார் (Ajith Pawar)  அதிருப்தியில் உள்ளார். ஏக்நாத் ஷிண்டே (Eknath Shinde) வும் மகிழ்ச்சியடையவில்லை.

எனவே இந்த லோக்சபா தேர்தலில் முன்பு பெற்ற 41 இடங்களை பாஜக (BJP)  மீண்டும் கைப்பற்றுமா என்பது சந்தேகம்தான்.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? பாஜக (BJP)  தனது பழைய வெற்றியை மீண்டும் பெறுமா? 

இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் தேர்தல் இந்தத் தேர்தல். மகாராஷ்டிராவில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்தான் மத்தியிலும் ஆட்சியைப் பிடிப்பார்கள். மத்தியில் ஆட்சி மாற்றத்தை மகாராஷ்டிரா தான் தீர்மானிக்கப் போகிறது.

இந்தியாவில் அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட முதல் மாநிலம் உ.பி. 2வது மாநிலம் மகாராஷ்டிரா. மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. உ.பி.யில் பாஜக (BJP)  கவனம் செலுத்துவது போல், மகாராஷ்டிராவிற்கும் பாஜக (BJP)   முக்கியத்துவம் அளித்துள்ளது.

2019ல் மகாராஷ்டிராவில் 41 தொகுதிகளில் பாஜக (BJP)  வெற்றி பெற்றது. மீண்டும், இந்தத் தேர்தலில் அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பாஜக (BJP)  உள்ளது. இதைவிட அதிக இடங்களைப் பெற்றால் பாஜக (BJP) வின் செல்வாக்கு வலுப்பெறும் என்று வேறு நிர்ப்பந்தங்கள் அவர்களுக்கு உண்டு. அப்படி அதிகமாகப் பெற்றால்தான் 400 இடங்களுக்கு மேல் என்ற கனவை பாஜக (BJP)  நிறைவேற்ற முடியும்.

மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தல் (Lok Sabha Election 2024 Maharasthra) 5 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இது ஏன் 5 நிலைகளில் வடிவமைக்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது

இந்த தேர்தலில் வாக்களித்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9.2 கோடி. இந்தியாவில் மொத்த வாக்காளர்கள் 98 கோடி. மகாராஷ்டிராவில் 10% வாக்காளர்கள் உள்ளனர்.மகாராஷ்டிரா விதர்பா, மராத்வாடா, மேற்கு மகாராஷ்டிரா, வடக்கு மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் என 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சி செய்தது. அதன் பிறகு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (Nationalist Congress Party)  ஆட்சி அமைத்தது. அடுத்து சிவசேனா (Shiv Sena)  ஆட்சி வந்தது.

குறிப்பாக 90களுக்குப் பிறகு பாஜக (BJP) வும் சிவசேனா (Shiv Sena) வும் கூட்டணியாகவும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (Nationalist Congress Party)  கூட்டணியாகவும் தேர்தலில் போட்டியிட்டன.

ஆனால், 2014 சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கட்சிகள் அனைத்தும் தனித்துப் போட்டியிட வேண்டியிருந்தது. அவர்களின் உண்மையான பலம் என்ன என்று பார்க்க முடிவு செய்தனர். அதன்பிறகு சுழற்சி முறையில் முதல்வர் பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இறுதியாக சிவசேனா (Shiv Sena)  இரண்டாக பிரிந்தது. தேசியவாத காங்கிரஸ் (Nationalist Congress Party)  கட்சியும் இரண்டாக உடைந்தது. இதற்கு பாஜக (BJP)  தான் காரணம்.

சிவசேனா (Shiv Sena)  மற்றும் தேசியவாத காங்கிரஸ் (Nationalist Congress Party)  கட்சிகளை பாஜக (BJP)  பிளவுபடுத்தினாலும், அக்கட்சியின் உண்மையான தொண்டர்கள் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் பக்கம்தான் உள்ளனர். அந்த கோபத்தை இந்த லோக்சபா தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என கணிப்புகள் கூறுகின்றன. அது உண்மையும் கூட.

மகாராஷ்டிராவில் பாஜக (BJP) வுக்கு 28% வாக்குகள் உள்ளன. சிவசேனா (Shiv Sena) வுக்கு 24% வாக்குகள் உள்ளன. காங்கிரசுக்கு 17% உள்ளது. தேசியவாத காங்கிரசுக்கு 16% உள்ளது. இவை தவிர சிறு கட்சிகளுக்கு 12% வாக்குகள் பதிவாகியுள்ளது.

அப்படிப் பார்த்தால், 2014, 2019 தேர்தல்களில் வெறும் 28% வாக்குகளில் பாஜக (BJP)  வெற்றி பெற முடியாது. பழைய வெற்றியை அடைய 45% முதல் 50% வாக்குகள் தேவை. இப்போது 22% வாக்குகள் வித்தியாசம் உள்ளது. ஏக்நாத் ஷிண்டே (Eknath Shinde)  மற்றும் அஜித் பவார் (Ajith Pawar)  இந்த இடைவெளியை நிரப்ப முடியுமா? இது மிகவும் சந்தேகத்திற்குரியது.

சரத் ​​பவாரை பாஜக (BJP)  அவமதித்ததும், தேர்தல் களத்தில் பாஜக (BJP) வால் உத்தவ் தாக்கரே தோல்வியடைந்ததும் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் மீது அனுதாப அலை வீசுகிறது.

இவை தவிர மகாராஷ்டிரா மாநிலம் பாஜக (BJP)  ஆட்சியால் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வர வேண்டிய தொழிற்சாலைகளை குஜராத்திற்கு கொண்டு சென்றனர். அதேபோல விவசாயிகளின் பிரச்சனையும் பெரியது. வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற பாஜக (BJP) வின் வாக்குறுதியில் 1% கூட நிறைவேற்றப்படவில்லை.

எனவே பாஜக (BJP)  கூட்டணி 20 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. மீதமுள்ள 28 இடங்களில் காங்கிரஸ், சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே வெற்றி பெறுவார்கள்

Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version