Light on Lotus Symbol Regardless Of Your Vote In Chennai
Tamil Nadu Election 2024 சென்னை வியாசர்பாடி (Chennai Vyasarpadi) எம்.கே.பி நகர் (MKP Nagar) பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த சின்னத்துக்கு நேராக உள்ள பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்துக்கு அருகில் உள்ள லைட் எரிவதாக (light on lotus symbol regardless of which symbol one vote for) எழுந்த புகாரையடுத்து திமுக (DMK), அதிமுக (ADMK) பூத் முகவர்கள் (Booth Agents) தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
வியாசர்பாடி எம்.கே.பி.நகர் மாநகராட்சி பள்ளி 150-வது பூத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவின் சின்னமான தாமரைக்கு லைட் எரிவதாக கூறி திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா! pic.twitter.com/aUA8mTRcmy
— Spark Media (@SparkMedia_TN) April 19, 2024
வாக்காளர்கள் சிலர் தாங்கள் வேறு சின்னத்துக்கு வாக்களித்தாலும் தாமரை சின்னத்திற்கு நேராக லைட் எரிவதாக (light on lotus symbol regardless of which symbol one vote for) கூறியதை அடுத்து, அதிமுக (ADMK), திமுக (DMK) உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி பாக முகவர்கள், பரிசோதிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விரைந்து வந்த தேர்தல் அதிகாரிகள் திமுக (DMK), அதிமுக (ADMK) பூத் முகவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்காமல் திமுக (DMK) , அதிமுக (ADMK) பூத் முகவர்கள் (Booth Agents) வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
ஏற்கனவே, கேரளாவில் காசர்கோடு தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது, பாஜகவுக்கு ஒரு முறை பட்டன் அழுத்தினால் 2 வாக்குகள் விழுவதாக சர்ச்சை எழுந்து, உச்ச நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
திமுக (DMK) , அதிமுக (ADMK) பூத் ஏஜெண்டுகளின் தர்ணாவை தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள், அந்த வாக்குச்சாவடியில் உள்ள இயந்திரத்தை ஆய்வு செய்தனர். அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின், அப்படி எதுவும் தவறு நடக்கவில்லை என உறுதி செய்தனர். தொடர்ந்து, 150வது எண் வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.