Kuwait Fire Accident: தெற்கு குவைத்தின் (Kuwait) அல்-மங்காஃப் (Al-Mangaf) பகுதியில் 195 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் (Kuwait Fire Accident) 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அல்-மங்காஃப் (Al-Mangaf) கட்டிடத்தில் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 மற்றும் அவர்களில் 42 பேர் இந்தியர்கள் என்று அறியப்படுகிறது; மீதமுள்ளவர்கள் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் நேபாள நாட்டவர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அதிகாலை 4:30 மணியளவில், கட்டிடத்தின் கீழ் தளம் ஒன்றில் உள்ள சமையலறையில் இருந்து தீ (Kuwait Fire in Flat), வேகமாக மற்ற தளங்களுக்கு பரவியது, பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
பலத்த காயம் அடைந்த தொழிலாளர்கள் சிலர் உயிருக்கு போராடி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி குவைத் செய்தி நிறுவனம் (KUNA) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதற்கான காரணத்தை கண்டறிய ஆதாரங்களை அதிகாரிகள் தற்போது தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் கேரளாவை சேர்ந்த என்ஆர்ஐ தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் சங்கிலியில் சுமார் 160 பணியாளர்கள் தங்கி உள்ளனர். பெரும்பாலான பணியாளர்கள் இந்திய குடிமக்கள்
“அலறல் மற்றும் திடீர் சத்தங்களைத் தொடர்ந்து நான் திடுக்கிட்டு எழுந்தேன்” என்று ஹைதராபாத்தில் உள்ள டோலிசியோவ்கியைச் சேர்ந்த பக்கத்து கட்டிடத்தில் வசிக்கும் முகமது இப்ராஹிம் இம்ரான் தெரிவித்தார்
“சில தொழிலாளர்கள் தீயில் இருந்து தப்பித்து தங்கள் உயிரை காப்பாற்ற கட்டிடத்திலிருந்து குதிப்பதைக் கண்டது பரிதாபமாக இருந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.
The video shows the moment when the Mangaf fire broke out, which claimed the lives of more than 40 people and left dozens injured. The fire started from the storage room of the building’s guard, where gas cylinders were kept, and engulfed the entire building.#Kuwait #Fire pic.twitter.com/N8akVUug4R
— Khizar Ali Khan (@Khizar_Alig) June 12, 2024
கேரளாவைச் சேர்ந்த மீடியா ஹவுஸ் ஒன்மனோரமா சேனலின் படி, உயிரிழந்தவர்களில் கேரளா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் போன்ற இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்
குவைத் (Kuwait) தில் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) மற்றும் ராகுல் காந்தி (Rahul Gandhi) இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். மேலும் குவைத் (Kuwait) தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், உதவி வழங்க உள்ளூர் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாகவும் கூறினார்.
“குவைத் (Kuwait) நகரில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தமளிக்கிறது. எனது எண்ணங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்று அவர் X இல் பதிவிட்டுள்ளார்.
தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களுக்கு நிவாரணம் வழங்கவும், இறந்தவர்களை விரைவாக மீட்டு வருவதை உறுதி செய்யவும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் அவசரமாக குவைத் (Kuwait) செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் (Prime Minister Narendra Modi) உத்தரவின் பேரில் சிங் குவைத் (Kuwait) செல்கிறார் என்று MEA செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் X இல் தெரிவித்தார்.
The fire mishap in Kuwait City is saddening. My thoughts are with all those who have lost their near and dear ones. I pray that the injured recover at the earliest. The Indian Embassy in Kuwait is closely monitoring the situation and working with the authorities there to assist… https://t.co/cb7GHN6gmX
— Narendra Modi (@narendramodi) June 12, 2024
Shocked and saddened by the horrific news of the death of more than 40 Indians in a fire in Kuwait City.
My deepest condolences go out to the bereaved families, and I wish a speedy recovery to all those injured.
The condition of our workers in the Middle East is a serious…
— Rahul Gandhi (@RahulGandhi) June 12, 2024
இதற்கிடையில், குவைத்துக்கான (Kuwait) இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, காயமடைந்த 30க்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்ட அல்-அதான் மருத்துவமனைக்குச் சென்றார்.
As directed by PM @narendramodi, MoS for External Affairs @KVSinghMPGonda is urgently travelling to Kuwait to oversee assistance to those injured in the fire tragedy and to coordinate with local authorities for early repatriation of mortal remains of those who have died in this…
— Randhir Jaiswal (@MEAIndia) June 12, 2024
Amb @AdarshSwaika visited the Al-Adan hospital where over 30 Indian workers injured in today’s fire incident have been admitted. He met a number of patients and assured them of full assistance from the Embassy. Almost all are reported to be stable by hospital authorities. pic.twitter.com/p0LeaErguF
— India in Kuwait (@indembkwt) June 12, 2024
السفير الهندي ووكيل وزارة الصحة المساعد للخدمات الطبية المساندة ومدير منطقة الاحمدي الصحية ومدير مستشفى العدان يعودون المرضي والمصابين جراء الحريقhttps://t.co/U8X42sKYV0 pic.twitter.com/kF1gN8DKCC
— الجريدة (@aljarida) June 12, 2024
ஸ்வைகா மங்காஃப் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு நிலைமையை மதிப்பீடு செய்தார்
Adarsh Swaika, Ambassador of India to Kuwait visited the tragic fire-incident site in Mangaf to ascertain the situation. Embassy is in constant touch with relevant Kuwaiti law enforcement, fire service and health authorities for necessary action and emergency medical health… pic.twitter.com/vGpJaua2je
— ANI (@ANI) June 12, 2024
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) இரங்கல் தெரிவித்ததோடு, இந்திய தூதரகத்தின் முழு ஆதரவையும் உறுதி செய்தார்.
“குவைத் (Kuwait) நகரில் தீ விபத்து பற்றிய செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். 40 க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம்,” என்றார்.
Deeply shocked by the news of the fire incident in Kuwait city. There are reportedly over 40 deaths and over 50 have been hospitalized. Our Ambassador has gone to the camp. We are awaiting further information.
Deepest condolences to the families of those who tragically lost…
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 12, 2024
அவர் மேலும் கூறுகையில், “மோசமான முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்” என்றார்.
“இந்தியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட சோகமான தீ விபத்து தொடர்பாக, தூதரகம் அவசர உதவி எண்: +965-65505246 ஐ அமைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தூதரகம் உறுதியுடன் உள்ளது” என்று குவைத் (Kuwait) தில் உள்ள இந்திய தூதரகம் X இல் ஒரு இடுகையில் தெரிவித்துள்ளது.
In connection with the tragic fire-accident involving Indian workers today, Embassy has put in place an emergency helpline number: +965-65505246.
All concerned are requested to connect over this helpline for updates. Embassy remains committed to render all possible assistance. https://t.co/RiXrv2oceo
— India in Kuwait (@indembkwt) June 12, 2024
குவைத் (Kuwait) துணைப் பிரதமர் ஃபஹத் யூசுப் அல்-சபா (Kuwait Deputy Prime Minister Fahad Yusuf Al-Sabah) , கட்டிட தீ விபத்து குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், கட்டிட உரிமையாளருக்கு கடுமையான தடைகளையும் விதித்துள்ளார்.
حضرة صاحب السمو أمير البلاد الشيخ مشعل الأحمد الجابر الصباح يبعث ببرقيات تعاز لأسر ضحايا حريق مبنى عمالي بمنطقة المنقف عبر فيها سموه عن صادق مواساته بضحايا حادث الحريق المؤسف الذي أسفر عن وفاة وإصابة العشرات
– سموه أعرب عن بالغ تأثره ومشاركة ذوي الضحايا أحزانهم وآلامهم بهذا… pic.twitter.com/UvSRGu253n
— كونا KUNA (@kuna_ar) June 12, 2024
குவைத்தின் (Kuwait) எமிர், ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா (Kuwait’s Emir, Sheikh Meshal Al-Ahmad Al-Jaber al-Sabah), பாரிய தீ விபத்து குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
பட்டத்து இளவரசர் ஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபா (Crown Prince Sheikh Sabah Khaled Al-Hamad Al-Sabah) இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தார்
سمو ولي العهد الشيخ صباح خالد الحمد الصباح يبعث ببرقيات تعاز لأسر ضحايا حريق مبنى عمالي بمنطقة المنقف ضمنها سموه صادق مواساته بضحايا حادث الحريق المؤسف الذي أسفر عن وفاة وإصابة العشرات راجيا سموه الباري جل وعلا أن يتغمد الضحايا بواسع رحمته وأن يمن على المصابين بسرعة الشفاء… pic.twitter.com/qKsrcqNOLw
— كونا KUNA (@kuna_ar) June 12, 2024