வீட்டிலிருந்தபடியே ரூ.75 லட்சம் வரை பயிர்க் மற்றும் வீட்டுக் கடன் பெற ‘கூட்டுறவு’ செயலி – எளிதான நடைமுறையுடன் | Kooturavu App

ரஃபி முகமது

 தமிழக கூட்டுறவு துறையின் புதிய கூட்டுறவு செயலி (Kooturavu App): அனைவருக்கும் கடன் பெறும் புதிய வழி

தமிழக கூட்டுறவு துறையின் புதிய கூட்டுறவு செயலி (Kooturavu App) பற்றி உங்களுக்குத் தெரியுமா?  

விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு கடன் வழங்கக்கூடிய கூட்டுறவு  செயலியை (Kooturavu App) தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

தமிழக கூட்டுறவுத் துறை, பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.

For Breaking News: The Daily Scroll Breaking News

Crop Loan (பயிர்க்கடன்): விவசாயிகளுக்கான முக்கிய சலுகை

பயிர்க்கடன்( Crop Loan): பயிர்க்கடனுக்கு ( Crop Loan) வரும்போது, நடப்பாண்டு கூட்டுறவு அமைப்புகள் மூலம், ரூ.16,500 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

இதனை செயல்படுத்த மத்திய கூட்டுறவு வங்கிகள் வாரியாக குறியீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

இந்த இலக்கில் 

– 30% புதிய உறுப்பினர்களுக்கும் 

– 20% பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கும் வழங்குவதை உறுதி செய்யவேண்டும்.

மேலும்

– பட்டியலின வகுப்பு மற்றும் பழங்குடியினரின் நில உடமையின் அடிப்படையில்,  

–  20% குறியீடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிர்ணயம் செய்யவேண்டும்.

கூட்டுறவு அமைப்புகள்: அனைவருக்கும் பயன்படும் புதிய திட்டம்

இதேநேரத்தில், சட்டசபை கூட்டத்தில், “கூட்டுறவு அமைப்புகளில் அங்கத்தினர்களாக உள்ள விவசாய பெருங்குடி மக்கள், சிறு வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்னையின உறுப்பினர்கள் மற்றும் நகைக்கடன் பெறும் இணை உறுப்பினர்கள் விரைவாகவும், எளிதாகவும், கடன் பெற்றிட இணைய வழி கடன் வழங்கும் வசதி செயல்படுத்தப்படும். இதனால் இளைய தலைமுறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் காலவிரயமின்றி உடனடி வங்கிச் சேவை பெறுவது உறுதிச் செய்யப்படும்” என்று கூட்டுறவு துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கடன் வகைவிவரம்
பயிர்க்கடன்ரூ.16,500 கோடி இலக்கு, 30% புதிய உறுப்பினர்கள், 20% பட்டியலின வகுப்புகள், மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு இலக்குகள்.
மற்ற கடன்கள்வீடு, நகை, தனிநபர், ஓய்வூதியர், பெண்கள், MSME, மாற்றுத்திறனாளிகள், வாகனங்கள், கல்வி, மனை வாங்கும் கடன் ஆகியவை குறைந்த வட்டியில் கிடைக்கும்.
இணைய வழி வசதிஇணையத்தில் உடனடியாக கடன் பெறும் வசதி, அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு.
செயலி பயன்பாடு‘கூட்டுறவு’ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து, “வங்கி சேவை” பிரிவைத் தேர்வு செய்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

How to Use Kooturavu App (புதிய கூட்டுறவு செயலி: விண்ணப்பிக்கும் முறை)

அதன்படி, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதியுடன் கூடிய “கூட்டுறவு செயலியை” (Kooturavu App)  கூட்டுறவுத்துறை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.  

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் புதிய கூட்டுறவு  செயலி (Kooturavu App)  குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார். 

இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி? யார் யார் இதற்கு விண்ணப்பிக்க முடியும்?   என்பது குறித்தும் முழுமையான தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கூட்டுறவு  செயலி (Kooturavu App) மூலம் செயல்படுத்தப்படும் கடன்கள்

பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்களால் கூட்டுறவு செயலி (Kooturavu App)  மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தொடர்புடைய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு இணைய வழியில் சென்றடையும்.  

இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

 Home Loan (வீட்டு கடன்): அதிகபட்சம் ரூ.75 லட்சம்

இந்த கூட்டுறவு செயலி  (Kooturavu App)   மூலம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம்.   இதற்கான வட்டி வீதம் 8.5% ஆகவும், இந்த கடனை அடைப்பதற்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். 

என்னென்ன கடன்கள், கூட்டுறவு செயலியில் எப்படி விண்ணப்பிப்பது (How to Apply for Loan in Kooturavu App)?

கூட்டுறவு வங்கி மூலம், வீட்டு கடன் உள்ளிட்ட கடன்களை பெறுவதற்கு கூகுள் பிளே ஸ்டோருக்குள் நுழைந்து, கூட்டுறவு செயலி  (Kooturavu App) என்ற ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும்.

– கூட்டுறவு செயலியை (Kooturavu App) திறந்து, “வங்கி சேவை” பிரிவை தேர்வு செய்யவும்.

– அதைத்தொடர்ந்து “கடன் தகவல்” பட்டனை அழுத்தவும்.

– அதில், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை வளர்ப்பு கடன், அடமானக் கடன், குறுகிய கால கடன், நகைக் கடன், தனிநபர் கடன், ஓய்வூதியர் கடன், வீட்டுக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், MSME கடன், வேலைசெய்யும் பெண்களுக்கான கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சில்லரை வணிகக் கடன், சுயஉதவிக்குழு கடன், தாட்கோ கடன், மனை வாங்கும் கடன், கல்விக் கடன், வாகனக் கடன், மூத்த குடிமக்களுக்கான அடமானக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களின் விவரம் பட்டியலிடப்பட்டிருக்கும்.

இந்த பட்டியலில் கடன்களுக்கான உச்சவரம்பு, கடன் கால அளவு, வட்டி வீதம், கடனுக்கான தகுதி உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.  

அதில், அதிகபட்சமாக வீட்டு கடனுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்படுகிறது. வீட்டு கடன் பெற விரும்புவோர் அதை தேர்வு செய்ய வேண்டும்.

“வீட்டுக்கடன்” என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ததும்,  

கூட்டுறவு சங்கம் தொடர்பான விவரங்கள் (மாவட்டம், வட்டம், சங்கம்), வங்கி விவரங்கள், தனிநபர், விவரங்கள், முகவரி, முந்தைய கடன் விவரங்கள் போன்றவற்றை பதிவு செய்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை நீங்கள் உபயோகப்படுத்தி, ‘கூட்டுறவு’ செயலியின் மூலம் உங்கள் நிதி தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ளுங்கள்!

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.