Kalaignar Magalir Urimai Scheme Update அனைத்து ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Scheme) வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று அறிவித்தது பெரும் விவாதமாகியுள்ளது.
இதற்கிடையில், எக்ஸ் தளத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர். தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் (Kalaignar Magalir Urimai Scheme) கீழ், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கவும், மாதம் ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி, அண்ணா பிறந்தநாளில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தற்போது 1 கோடியே 16 லட்சம் குடும்பத் தலைவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறுகின்றனர். கடந்த 13 மாதங்களாக இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Scheme), பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
Kalaignar Magalir Urimai Scheme Eligibility
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Scheme) பெற சில தகுதிகளையும் அரசு நிர்ணயித்துள்ளது. அதன் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஓராண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அனைத்து தமிழ்நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார். ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் வரும் ஜனவரி மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Scheme) வழங்கப்படும் என்று அருப்புக்கோட்டையில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகளின் தொடக்க விழாவில் அவர் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ரேஷன் கார்டு உள்ள அனைத்து பெண்களுக்கும் வரும் ஜனவரி மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் (Kalaignar Magalir Urimai Scheme) என்று அமைச்சர் அறிவித்தது பெரும் விவாதமாகியுள்ளது.
இதற்கிடையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Scheme) தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர். அவர் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு (Kalaignar Magalir Urimai Scheme) தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்த அனைவரின் விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்” என்று தெரிவித்தார்.