Hindi Imposition NEP: மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். அதனை பாதுகாப்பது கடமை. இதைத் தன்னிகரற்ற உணர்வுடன் 20 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாடு அரசு உணர்ந்து, ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. இப்போது அதே பாதையை மற்ற மாநிலங்கள் அவசரமாக பின்பற்ற ஆரம்பித்துள்ளன. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்துக்கு நடுவில் (Hindi Imposition), இந்த மொழிச்சட்டம் மீண்டும் தேசிய மட்டத்தில் பேசப்படத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் தற்போதைய சூழலில், மொழிக்கான உரிமை மோதல் மிகுந்து எழுந்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை (NEP) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வன்மையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்தக் கொள்கை கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. முக்கியமாக, ஆளும் திமுக அரசு இதைத் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்கிறது (#hindiimposition).
Also Read: 83 கி.மீ மைலேஜ் & பவர்புல் இன்ஜினுடன் Platina-க்கு சவாலாக வந்துவிட்டது புதிய TVS Discover!
Hindi Imposition | ரூ.5000 கோடி இழப்பு? தமிழகத்தின் உறுதியான நிலைப்பாடு!
மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் ஒரு கடிதம் எழுதி, தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திடாமல் இருப்பதனால் தமிழ்நாடு ரூ.5000 கோடி நிதியை இழக்கக்கூடும் என எச்சரித்தார். ஆனால், தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்தக் கடிதத்திற்கு பதிலளித்து, “தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்” என்று உறுதி அளித்தார். முதல்வர் ஸ்டாலின் இந்தப் போராட்டத்தை (Hindi Imposition) முன்னின்று நடத்தி வருகிறார்.
Delimitation in the past did affect Tamil Nadu .
Now that we have taken this issue seriously to protect the democratic interest of the State. https://t.co/Qii1YAcYlz
— Dr.S.A.S. Hafeezullah (@DrHafeezDMKoffl) February 26, 2025
Hindi Imposition | மொழிக்கான போராட்டம் கர்நாடகாவிலும் தீவிரம்!
இந்த நிலையில், தமிழ்நாட்டின் இந்த மொழிப் பாதுகாப்பு கொள்கைக்கு கர்நாடகாவிலிருந்து ஆதரவு பெருகி வருகிறது. #NoHindiImposition போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் டிரெண்டாகின்றன. “தமிழர்கள் மீது எனக்குப் பொறாமை! நம்ம கன்னடிக மக்களுக்கும் இது போன்ற மொழிச் சட்டம் இருக்க வேண்டும்,” என்று சிலர் வருத்தத்தோடு தெரிவிக்கின்றனர். கர்நாடக அரசு ஏற்கெனவே தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்ட போதிலும், மக்களின் எதிர்ப்பும் ஆதரவும் (Hindi Imposition) இணையத்தில் பரபரப்பாகி வருகிறது.
Hindi Imposition | பிற மாநிலங்கள் எதற்காக அவசர சட்டங்களை கொண்டு வருகிறார்கள்?
தமிழ்நாடு 20 வருடங்களுக்கு முன்பே நிறைவேற்றிய மொழிக்கொள்கை சட்டம் தற்போது பிற மாநிலங்களில் முக்கியத்துவம் பெற தொடங்கியுள்ளது.
- பஞ்சாப்: CBSE உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயமாக்கும் சட்டத்தை முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். CBSE தேர்வு திட்டத்தில் இருந்து பஞ்சாபி மொழி நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், பஞ்சாப் அரசு அதற்கான பதிலடி கொடுத்துள்ளது.
- தெலுங்கு: தெலுங்கானா அரசு CBSE, ICSE, IB பாடத்திட்ட பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழியை கட்டாயமாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
Hindi Imposition | தமிழ்நாடு வழிகாட்டிய பாதை!
இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டின் மொழிப் பாதுகாப்பு சட்டம் முன்னோடியாக அமைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம்” படி, அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 2015-16 கல்வியாண்டில் இது அமல்படுத்தப்பட்டு, காலத்திற்கேற்ப மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, தமிழ்நாட்டின் இந்த சட்டம் பிற மாநிலங்களில் ஏன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது? இன்னும் எந்தெந்த மாநிலங்கள் இதைப் பின்பற்றப்போகின்றன? இந்தப் பயணம் எப்படி தொடரும்?
காத்திருங்கள், மொழிப் போராட்டத்தின் அடுத்த அதிகாரத்திற்காக!