Himachal Pradesh பிஜேபி திட்டம் தோல்வி! இமாச்சலில் தப்பித்த காங்கிரஸ் அரசு!

ரஃபி முகமது

Himachal Pradesh   ராஜ்யசபா தேர்தலில் 6 காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி பிஜேபிக்கு வாக்களித்த பிறகு அங்கு அரசியல் நிலவரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து விட்டது என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலவருமான ஜெய்ராம் தாக்கூர் கூறி காங்கிரஸ் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தினார். மாநில அமைச்சரவையில் இருந்து அமைச்சர் விக்ரமாதித்ய சிங் ராஜினாமா செய்து பதட்டத்தை கூட்டினார்.

amit shah

இந்த நிலையில் இன்று மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கட்சி மாறி ஓட்டளித்த 6 MLA க்கள் மற்றும் ஒரு மாநில அமைச்சர் ராஜினாமா என்ற பதட்டத்தில் பட்ஜெட் வாக்கெடுப்பில் அரசுக்கு போதிய ஆதரவு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் முதல்வர் பதவி விலகினார் என்ற செய்தி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி .

காங்கிரஸ் இதை எப்படி சமாளிக்கும் என்ற கேள்வியும் பிஜேபியின் ஆபரேஷன் லோட்டஸ் வெற்றி என்ற செய்தியும் அரசியல் வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தியது.

Himachal Pradesh Speaker

அனால் காங்கிரஸ் வேறொரு திட்டத்தை வைத்திருந்தது. சட்டமன்றம் கூடியவுடன் எப்படியும் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து விடும் என்ற மகிழ்ச்சியில் கோஷங்களை வெகு வேகமாக பிஜேபி MLA க்கள் எழுப்பியபடி இருந்தனர். இங்கு தான் காங்கிரஸின் ஆட்டம் ஆரம்பித்தது. கோஷங்களை எழுப்பிய 15 பிஜேபி MLA க்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்தி மார்ஷல்கள் உதவியுடன் அவர்களை சட்ட மன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளியேற்றினார்.

 

DKS

பிஜேபி MLA க்களை வெளியேற்றி விட்டு பட்ஜெட் மசோதாவை நிறைவேற்றிது காங்கிரஸ் அரசு. இன்னும் மூன்று மாதங்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவை இல்லை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி கர்நாடக துணை முதல்வர் DK சிவகுமார் மற்றும் ஹரியானா காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங்க் ஹுதாவை ஹிமாச்சலுக்கு அனுப்பி நிலைமையை கட்டுக்குள் கொன்டு வர அனுப்பியுள்ளது.

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.