Entrepreneurship Development Programme: தமிழக அரசு (Tamilnadu Government) சார்பில் தொழில்முனைவோர்களுக்கு ஐந்து நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி (Entrepreneurship Development Programme) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று (ஜூலை 3) தமிழ்நாடு அரசு (Tamilnadu Government) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசின் (Tamilnadu Government) தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development and Innovation Institute) சார்பில் சென்னையில் “நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம் (You too can be an Entrepreneur – Entrepreneurship Development)” என்ற தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி ஜூலை 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை (5 நாட்கள்) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் தொழில் முனைவோரின் அறிமுகம் மற்றும் அடிப்படைகள், வணிக நெறிமுறைகள் மற்றும் அடிப்படைகள், சந்தைப்படுத்துதல் மற்றும் பிராண்டிங், மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி மேலாண்மை, அடிப்படை கணக்குகள் -ERP Tally, ஜிஎஸ்டி, இ-வே பில், சிறு வணிகம் தொடர்பான சட்டங்கள், மாநில தொழில் கொள்கை, MSME வகைப்பாடு பதிவுகளைப் பற்றி விளக்கங்கள் வழங்கப்படும்.
Also Read: செந்தில் பாலாஜி ஜூலை 8ஆம் தேதி ஜாமீனில் விடுதலை? Senthil Balaji Case
இந்த பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆண், பெண் என இருபாலரும், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் குறைந்தபட்சமாக 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி வசதி செய்து தரப்படும். தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெறலாம்.
இந்த பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development and Innovation Institute), சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல் (Ekkaduthangal), சென்னை – 600 032 (என்ற முகவரியிலும், 7010143022 / 8668102600 ஆகிய தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என தமிழக அரசு (Tamilnadu Government) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.