Courtallam Exciting Boat Rides Begins குற்றாலம் (Courtallam) ஐந்தருவி (Aintharuvi) வெண்ணமடை (Vennamadai) படகு குழாமில் தண்ணீர் நிரம்பியதால், படகு சவாரி தொடங்கியிருக்கிறது. தமிழகம் (Tamil Nadu) மட்டுமின்றி பல மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு (Courtallam) வருகை தருகின்றனர். இந்நிலையில், குற்றாலத்தில் (Courtallam) இருந்து ஐந்தருவி (Aintharuvi) செல்லும் சாலையில் அமைந்துள்ள படகு குழாமில் 2 பேர் மிதி படகு, 4 பேர் மிதி படகு என மொத்தம் 31 படகுகள் உள்ளன.
Also Read: IND vs ZIM 1st T20I Highlights: இந்திய அணி ஜிம்பாப்வேவிடம் அதிர்ச்சித் தோல்வி
முன்னதாக, மே (May) 15 முதல் அருவிகளில் தண்ணீர் விழுந்தபோதும் குளத்தில் முழுமையாக தண்ணீர் நிரம்பவில்லை. தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்ததால் படகு குழாம் நிரம்பியுள்ளது. இந்த ஆண்டு சீசனுக்கான படகு சவாரியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜூலை (July) 6 அன்று தொடங்கி வைத்தனர்.
கடந்த ஆண்டைப்போலவே, அரை மணி நேர சவாரிக்கு 2 இருக்கை படகுகளுக்கு ரூ.150, 4 இருக்கை படகுகளுக்கு ரூ.200, 4 இருக்கை துடுப்பு படகுகளுக்கு ரூ.250, ஹயாக் வகை படகுகளுக்கு ரூ.150 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றாலத்தில் (Courtallam) கடந்த வருடம் சாரல் திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு அதனை சிறப்பாக நடத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன என்று தென்காசி (Tenkasi) மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.
Also Read: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் | Pradhan Mantri Fasal Bima Yojana 2024
Also Read: சேலம்- சென்னை இடையே மாலையிலும் விமான சேவை! Salem Chennai Flight