Congress Chombu Compaign: கர்நாடகா (Karnataka) தேர்தல் களத்தில் ’சொம்பு’ இப்போது பேசுபொருளாகிவிட்டது.
மோடி அரசு கர்நாடக மக்களுக்கு வெற்று ‘‘சொம்புக்’ ’களை மட்டுமே தருகிறது – போலி வாக்குறுதிகள் மற்றும் பாரபட்சம் என்று காட்ட கர்நாடக காங்கிரஸ் ‘சொம்பு’ (லோட்டா) பிரச்சாரத்தை தொடங்கியது.
மோடி (Prime Minister Narendra Modi) கர்நாடகா (Karnataka)விற்குப் பிரசாரம் செய்ய வந்த போது நாளிதழ்களில் சொம்பு படத்தை வைத்து பாஜக (BJP) கூட்டணியைக் கிண்டலடித்து விளம்பரம் வெளியிட்டிருந்தது காங்கிரஸ் (Congress Party) . அந்த விளம்பரம் மோடி (Prime Minister Narendra Modi) யின் பார்வைக்கும் நிச்சம் போயிருக்கும்.
பாஜக (BJP) கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் (JD (S)) தேவகவுடாவுடன் (Deve Gowda) ஒரே மேடையில் மோடி (Prime Minister Narendra Modi) பிரசாரம் செய்தார். அப்போது, சொம்பு விளம்பரம் வந்த பேப்பரை மோடி (Prime Minister Narendra Modi) யிடம் காட்டி, ‘’நம்மைச் சொம்பு எனக் கிண்டலடித்திருக்கிறார்கள்’’ என தேவகவுடா (Deve Gowda) சொன்ன போது மோடி (Prime Minister Narendra Modi) யின் முகம் மாறியது. அந்த பேப்பரை பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் மோடி (Prime Minister Narendra Modi) . ’’எதிரியின் விளம்பரத்தைக் கூட்டணிக் கட்சிக்காரனே வந்து மேடையில் காட்டுவானா?’’ என மோடி (Prime Minister Narendra Modi) கொதிநிலைக்குப் போயிருப்பார்
https://twitter.com/srivatsayb/status/1781709002449310023
மேடையில் இப்படியென்றால் அவர் சாலையில் செல்லும் போது காங்கிரஸ் (Congress Party) காரர்கள் சொம்புகளைத் தூக்கிக் காட்டி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
Karnataka Youth Congress workers led by @nalapad, have carried out a symbolic protest against Prime Minister Modi for denying the state its rightful share.
During the protest, IYC workers displayed an 'Empty Chombu' to the Prime Minister's convoy, in order to draw attention to… pic.twitter.com/Prj7W1eHXK
— Indian Youth Congress (@IYC) April 20, 2024