CAA: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா (Himanta Biswa Sarma), 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு வந்தவர்களை நாடு கடத்துவோம் என்று அறிவித்துள்ளார். இந்த கருத்து, அசாமில் சிஏஏ (CAA குடியுரிமை திருத்த சட்டம்) எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையில், சிஏஏ சட்டத்தை (CAA குடியுரிமை திருத்த சட்டம்) மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மே மாதம் அமல்படுத்தியது.
முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா (Himanta Biswa Sarma), 2015 க்கு பிறகு குடியேறியவர்களை நாடு கடத்துவது சிஏஏ விதிகளின் படி சட்டப்பூர்வமாகவே இருக்கும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதத்தில், அவர், அசாமிற்கு சிஏஏ (CAA குடியுரிமை திருத்த சட்டம்) முக்கியமல்ல என்றும் அசாமில் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் குறைவாகவே உள்ளனர் என்று குறிப்பிட்டார்.
முதல்வர் சர்மா (Himanta Biswa Sarma) கூறியதாவது, “சிஏஏ சட்டத்தின் (CAA குடியுரிமை திருத்த சட்டம்) கீழ் குடியுரிமை கேட்டு வெறும் இரண்டு பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 2015 க்கு முன்பாக வந்தவர்கள் சிஏஏ சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள்மீது வழக்கு தொடரப்படும். 2015க்கு பிறகு வந்தவர்களை நாடு கடத்துவோம்” என்றார்.
சிஏஏ சட்டம் (CAA குடியுரிமை திருத்த சட்டம்), பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்குள்ளான சிறுபான்மையினருக்கு (இந்துக்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், ஜெயின்) இந்தியாவில் குடியுரிமை வழங்குவதற்காக மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம் 1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் தஞ்சம் அடைந்துவரும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர், ஜைனர்கள், பார்சி, கிறிஸ்தவ மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக இந்த சட்டம் வழிவகை செய்யும்.
செய்திகளை உடனுக்குடன் பெற தி டெய்லி ஸ்க்ரால் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…