திரிணாமுல் காங்கிரஸில் இணையும் 3 பாஜக எம்பிக்கள்? BJP MPs Switch to Trinamool Congress?

ரஃபி முகமது

BJP MPs Switch to Trinamool Congress? மேற்குவங்க பாஜக (BJP)  வில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., அனந்த் மகாராஜா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை (Mamata Banerjee) திடீரென சந்தித்தார். லோக்சபா தேர்தலில் (Lok Sabha Elections 2024) வெற்றி பெற்ற பாஜக (BJP)  எம்.பி.,க்கள் 3 பேர் திரிணாமுல் காங்கிரசில் (Trinamool Congress) சேரப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து டெல்லி பாஜக (BJP)  தலைமை அவசரமாக மத்திய குழுவை மேற்கு வங்க மாநிலத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின்  (Mamata Banerjee) திரிணாமுல் காங்கிரஸ் (Trinamool Congress) அத்தியாயத்தை பாஜக (BJP)  முடிவுக்குக் கொண்டுவரும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கணித்திருந்தன. ஆனால் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் 29 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் (Trinamool Congress)  வெற்றி பெற்றது. பாஜக (BJP) வால் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.  

பாஜக (BJP)   எம்.பி.,க்களின் நிலை என்ன?: இதனிடையே, லோக்சபா தேர்தல் (Lok Sabha Elections 2024) முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து, பாஜக (BJP) வின், 3 புதிய எம்.பி.,க்கள், திரிணாமுல் காங்கிரசுக்கு  (Trinamool Congress)   தாவ உள்ளனர்; பாஜக (BJP)  எம்பிக்கள் எண்ணிக்கை மேலும் குறையும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

திரிணாமுல் கட்சிக்கு  (Trinamool Congress)  இணையும் பாஜக (BJP)  எம்.பி.க்களும்?: இந்நிலையில், சௌமித்ரா கான் என்ற பாஜக (BJP)  எம்.பி., உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ்  (Trinamool Congress)   தலைவரின் காலில் விழுந்து வாழ்த்து தெரிவித்தார். நடப்பு மக்களவைத் தேர்தலில் வெறும் 5,567 வாக்குகள் வித்தியாசத்தில் சௌமித்ரா கான் வெற்றி பெற்றார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ்  (Trinamool Congress)   பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியை சௌமித்ரா கான் பாராட்டி வருகிறார். அவரைப் போலவே மேலும் சில பாஜக (BJP)  எம்பிக்களும் திரிணாமுல் காங்கிரஸைப்  (Trinamool Congress)   பாராட்டி வருகின்றனர்.

பாஜக (BJP)  எம்.பி., மம்தா சந்திப்பு: அடுத்த கட்டமாக, பாஜக (BJP) வின், ராஜ்யசபா எம்.பி., அனந்த் மகாராஜா, முதல்வர், மம்தா பானர்ஜியை (Mamata Banerjee) சந்தித்து பேசினார். கூச்பிகார் பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தியவர் அனந்த் மகாராஜா. அனந்த் மகாராஜாவை முதலில் பயன்படுத்தியது பாஜக (BJP) . ஆனால் தற்போதைய தேர்தலில் கூச்பிகார் பகுதியில் பாஜக (BJP)  பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த முறை மம்தாவின் (Mamata Banerjee) திரிணாமுல்  (Trinamool Congress)  உடன் அனந்த் மகாராஜா கைகோர்த்ததாகவும் கூறப்படுகிறது

டெல்லி மத்திய கமிட்டி: உள்ளூர் பாஜக (BJP)  நிர்வாகிகளுக்கு எதிராக பாஜக (BJP) வினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மேற்கு வங்கத்தில் பாஜக (BJP) வின் முன்னிலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைப் பொறுத்த வரையில், பாஜக (BJP) வுக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது, ஆனால் பெரும்பாலான இடதுசாரிகள் பாஜக (BJP) வுடன் இணைந்ததால் அது மோசமான திருப்பத்தை எடுத்துள்ளது. தற்போது, ​​திடீரென கூச்பிகார்விற்குள்ளேயே கிளர்ச்சிக் குரல்கள் வெடித்துள்ளதால், உடனடியாக டமத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கு வங்க பாஜக (BJP)   எம்.பி.க்களை தக்கவைக்கவும், உள்ளூர் பாஜக (BJP)   பூசல்களை முடிவுக்கு கொண்டு வரவும், இந்த டில்லி மத்திய குழு உரிய ஆலோசனை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version