Attur to Perambalur four lane project ஆத்தூர் – பெரம்பலூர் நான்கு வழிப் பாதை [Attur to Perambalur four lane project] அமைக்கும் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அப்பகுதியின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு (Arun Nehru), மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை (Nitin Gadkari) சந்தித்துள்ளார்.
தஞ்சாவூரிலிருந்து சேலம் வரையிலான பாதையில் [Thanjavur to Salem ] தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். அரியலூரிலிருந்து சிமெண்ட் மற்றும் பிற பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளும் இப்பாதையைப் பயன்படுத்துகின்றன. பெரம்பலூரில் உள்ள கல்வி நிறுவனங்களில் [educational institutions] பயிலும் மாணவர்களும் இச்சாலையை நம்பியுள்ளனர்.
For Latest News: The Daily Scroll Breaking News
2019ஆம் ஆண்டில், இச்சாலையை (Attur to Perambalur four lane project) மேம்படுத்த ரூ.19.60 கோடி ஒதுக்கீடு [allocation] செய்யப்பட்டது. பின்னர் இது தேசிய நெடுஞ்சாலையாக [National Highway] அறிவிக்கப்பட்டது.
இப்போது, நான்கு வழிப் பாதை திட்டத்தை (Attur to Perambalur four lane project) விரைவுபடுத்த வேண்டி, எம்.பி. அருண் நேரு (Arun Nehru) டெல்லியில் அமைச்சர் நிதின் கட்கரியை 9NItin Gadkari) சந்தித்தார். இச்சந்திப்பு பற்றி தனது சமூக ஊடகப் பக்கத்தில் [social media page] பதிவிட்டுள்ள அவர், இந்நெடுஞ்சாலை உள்ளூர் விவசாயிகள் மற்றும் வணிகர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் என்றும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Met with Hon’ble Union Minister of Road Transport and Highways Thiru @nitin_gadkari avl to discuss the much-needed 4-lane road project from Perambalur to Athur. This road will be a game-changer for local farmers and businesses, ensuring efficient transportation of goods and… pic.twitter.com/dA8zTd7gsq
— K.N. Arun Nehru (@ArunNehru_DMK) September 9, 2024