Student Killed Teacher in Assam: அசாமில் சீருடை அணியாததை கண்டித்ததால் ஆசிரியரை வகுப்பறையில் மாணவன் கத்தியால் குத்தி கொன்றான் (Student Killed Teacher). இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் சம்பவங்கள் தினமும் நடைபெறுகிறது.. ஆசிரியரை எதிரியாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆசிரியர்கள் திட்டியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. சில நேரங்களில் மாணவர்கள் ஆசிரியர்களைக் கொன்று விடுகிறார்கள். அசாமில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் உள்ள சாய் விகாஸ் அகாடமி பள்ளியில் வகுப்புகள் வழக்கமாக நடந்து வருகின்றன. அங்கு 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்கு வந்தான்.. ஏன் சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்தான் என வகுப்பு ஆசிரியர் (அறிவியல் ஆசிரியர்) ராஜேஷ் பாபு பிஜவாடா திட்டியுள்ளார். மேலும், ஆசிரியர் ராஜேஷ் அவனை வகுப்பை விட்டு வெளியேறுமாறு பணிவுடன் கூறியுள்ளார். ஆனால் மாணவன் அங்கேயே நின்றிருந்தான். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ராஜேஷ், அவனை வெளியே செல்லுமாறு வலுக்கட்டாயமாக கூறினார்.
கோபத்தின் உச்சத்தை அடைந்த மாணவன், தன் உடலில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஆசிரியரின் தலையில் குத்தினான். காயமடைந்த ஆசிரியர் ராஜேஷ் பாபு பிஜ்வாடா வகுப்பில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் (Student Killed Teacher).. இதை பார்த்த மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.
பின்னர் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் (Student Killed Teacher).. இந்த சம்பவம் அசாம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்ற மாணவனை கைது செய்தனர்.