Arrmstrong Killed by Arcot Suresh Gang: பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் (Bahujan Samaj Party) மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங்கின் (Arrmstrong) கொலை சென்னையில் பெரம்பூரில் (Perambur) நடந்து தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தலித் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடிய ஆம்ஸ்ட்ராங் (Arrmstrong) , பலரை வழக்கறிஞர்களாக ஆக்கியவர்.
ஆம்ஸ்ட்ராங்கின் (Arrmstrong) மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 5 ஆம் தேதி மாலை தனது வீட்டருகே சென்னையின் (Chennai) பெரம்பூரில் (Perambur) சடையப்பன் தெருவில் நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி சரமாரியாக வெட்டியது. உயிர் தப்பிக்க விரும்பிய ஆம்ஸ்ட்ராங் (Arrmstrong), காயங்களுடன் ஓடினார், ஆனால் கும்பல் அவரை தொடர்ந்து தாக்கி படுகொலை செய்தது. ஆம்ஸ்ட்ராங் (Arrmstrong) க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், ஆனால் தீவிர காயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளச்சாராய சம்பவங்கள் சட்டம் ஒழுங்குக்கு சவாலாக உள்ள நிலையில், இந்த கொலை சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித் கட்சியின் மாநிலத் தலைவர் என்பதும் கூடுதல் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் (Arrmstrong) உயிரிழந்த நிலையில் அவரது உடலை போஸ்ட் மார்ட்டத்துக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். சென்னை வட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆம்ஸ்ட்ராங் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதால், அவருக்கு இருந்த முன் விரோதங்கள் பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
ஆம்ஸ்ட்ராங்கை (Arrmstrong) கொலை செய்தது யார் என விசாரிக்கும்போது, போலீஸ் சுரேஷ் கும்பலை (Arcot Suresh Gang) சந்தேகிக்கிறது. புண்ணை கிராமத்தைச் சேர்ந்த ரவுடி சுரேஷ் (Arcot Suresh) மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 2023 ஆகஸ்ட் 18ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர் சுரேஷ், தனது நண்பர்கள் உடன் பட்டினப்பாக்கம் கடற்கரையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் வந்து சுரேஷையும், மாதவனையும் தாக்கியது. இதில் சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், மாதவன் உயிர்தப்பினார். ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் ஜோகன் கென்னடி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் (Arrmstrong) மரணம் மற்றும் ஆற்காடு சுரேஷின் (Arcot Suresh) கொலை சம்பவங்களின் பின்னணியில் உள்ள ஆருத்ரா கோல்டு மோசடி (Aruthra Gold) விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் அந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதால் சுரேஷின் ஆதரவாளர்கள் அவரை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது.
இந்த கொலை படுகொலைக்கு பழி தீர்க்க நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.