Former ADMK Minister Vijayabaskar Absconding கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் (M. R. Vijayabaskar) தனது ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து கரூர்-மேலகரூர் துணை பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் நில அபகரிப்பு குறித்து புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், ஷோபனா, யுவராஜ், பிரவீன் உள்பட மொத்தம் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தன் பெயர் சேர்க்கப்படலாம் என்ற அச்சத்தில் திரு. விஜயபாஸ்கர் (M. R. Vijayabaskar) , ஜூன் 12ஆம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
ஜூன் 25ஆம் தேதி இந்த மனுவின் மீது விசாரணை நடந்தபோது, நீதிமன்றம் எம்.ஆர். விஜயபாஸ்கரின் (M. R. Vijayabaskar) மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், முன்ஜாமீனும் மறுக்கப்பட்டதால் திரு. விஜயபாஸ்கர் தலைமறைவானார்.
சிபிசிஐடி போலீசார் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை (M. R. Vijayabaskar) கைது செய்ய தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இந்த வழக்கில் விஜயபாஸ்கரை பிடிக்க 5 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு, சிபிசிஐடி சிறப்பு படை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.